இபிஎஸ் + ஓபிஎஸ் + டிடிவி.. புதுக்கோட்டை டூ திருச்சி பயணத்தில் அமித் ஷா போடும் மாஸ்டர் பிளான்

Published : Jan 02, 2026, 02:49 PM IST

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழ்நாடு பயணம், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை மையமாகக் கொண்டுள்ளது. இது தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

PREV
16
அமித் ஷா தமிழ்நாடு வருகை

திராவிட அரசியலின் கோட்டையாக நீண்ட காலமாக பார்க்கப்படும் தமிழ்நாட்டில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி மீண்டும் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த சூழலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜனவரி 4ஆம் தேதி தமிழ்நாடு வருகை தருகிறார். இது ஒரு வழக்கமான அரசியல் பயணம் அல்ல. தெற்கில் பாஜகவின் அரசியல் அடித்தளத்தை வலுப்படுத்தும் திட்டமிட்ட முன்னேற்றமாகவே அரசியல் வட்டாரங்கள் இதை மதிப்பிடுகின்றன. இந்த இரு நாள் பயணத்தின் தொடக்கம் புதுக்கோட்டையில் நடைபெறுகிறது. அங்கு தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னெடுத்த “தமிழகம் தலை நிமிரத் தமிழனின் பயணம்” யாத்திரையின் நிறைவு விழாவில் அமித் ஷா பங்கேற்கிறார்.

26
தமிழ்நாட்டில் அமித் ஷா

இந்த யாத்திரை, திமுக ஆட்சியை நிதி முறைகேடு, நிர்வாகத் தோல்வி, நீதித் துறையின் செயலிழப்பு போன்ற குற்றச்சாட்டுகளுடன் விமர்சித்தது. “தமிழ்நாட்டில் நிதியும் சரியில்லை, நீதியும் இல்லை” என்ற வாசகம், பாஜகவின் முக்கிய அரசியல் குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது. இந்த மேடையில் அமித் ஷா உரையாற்றுவது, தமிழ் அடையாள அரசியலை பாஜக தனது அரசியல் மொழியாக மாற்ற முயல்வது ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. இந்தி திணிப்பு குற்றச்சாட்டுகளை முறியடிக்க, தமிழ் பெருமை, தமிழ் கலாசாரம் ஆகியவற்றை முன்வைத்து பாஜக அரசியல் செய்யும் யுக்தியின் ஒரு பகுதியாகும் யாத்திரை விளங்கும் என்று பாஜக தரப்பில் கூறப்படுகிறது.

36
அதிமுக ஒன்றிணைப்பு பேச்சுவார்த்தை

“தமிழகம் தலை நிமிர” என்ற வாசகம், மாநில அரசியலில் பாஜகவின் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் சொல்லாக மாறியுள்ளது. பயணத்தின் அரசியல் மையம் திருச்சி. இங்கு பாஜக மாநில முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டத்தில், 2026 தேர்தல் வியூகங்கள் குறித்து அமித் ஷா விரிவாக பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே நேரத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை (இபிஎஸ்) அமித் ஷா சந்திக்கலாம் என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு நடைபெற்றால், அதிமுக–பாஜக கூட்டணியின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம்.

46
இபிஎஸ் ஓபிஎஸ் டிடிவி கூட்டணி

குறிப்பாக ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) மற்றும் டி. டி.வி.தினகரன் (டிடிவி) ஆகியோரின் இணைப்பு, தொகுதி பங்கீடு, கூட்டணி விரிவாக்கம், தேர்தல் வியூகம் போன்றவை ஆலோசனைக்கு வரக்கூடும். திமுக எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, “திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலக தயாராகிறது” என்ற நயினார் நாகேந்திரனின் பேச்சு, அரசியல் களத்தில் புதிய விவாதம் கிளப்பியுள்ளது. ஆனால் இதற்கு உறுதியான ஆதாரம் இல்லை. தமிழக காங்கிரஸ், விஜயின் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

56
அமித் ஷா மாஸ்டர் பிளான்

அமித் ஷாவின் அரசியல் பாணி, நீண்டகால திட்டமிடலுக்குப் பெயர் பெற்றது. 2014ஆம் ஆண்டு “கேரளாவின் கோட்டையான திருவனந்தபுரத்தை பிடிப்போம்” என்று அவர் விடுத்த சவால், 11 ஆண்டுகளுக்குப் பிறகு நிஜமாகியதை பாஜக தொண்டர்கள் நினைவூட்டுகின்றனர். அதே மாதிரியான நம்பிக்கையுடன், “தமிழகத்தில் அடுத்த ஆட்சி எங்களுடையதே” என்ற உறுதிமொழியுடன் இப்போது அவர் களத்தில் இறங்கியுள்ளார். திருச்சியில் நடைபெறும் பொங்கல் நிகழ்ச்சியில், 2,000க்கும் மேற்பட்ட பெண்களுடன் அமித் ஷா பங்கேற்பது, பாஜகவை சமூக, கலாசார ரீதியாக மக்கள் நெருக்கமாகவும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

66
பாஜக கூட்டணி வியூகம்

யாத்திரைகள், திருவிழா பங்கேற்புகள், கோயில் அரசியல் போன்றவை மூலம், பாஜக தனது வாக்கு வங்கியை மெதுவாக விரிவுபடுத்த முயல்கிறது. தற்போது தமிழகத்தில் பாஜகவின் வாக்குப் பங்கு சுமார் 11% அளவில் இருப்பதாக அரசியல் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், திராவிடக் கட்சிகளின் ஆழமான சமூக வேர்கள், சாதி சமன்பாடுகள், மாநில உரிமை அரசியல் போன்றவை பாஜகவுக்கு பெரிய சவால்களாக உள்ளன. மொத்தத்தில், அமித் ஷாவின் இந்த தமிழ்நாடு பயணம் ஒரு முக்கிய அரசியல் திருப்பு முனையாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. இது உடனடி வெற்றிக்கான முயற்சியா, அல்லது கேரளாவைப் போல நீண்டகால ஊடுருவலா என்பது வரும் மாதங்களில் தெளிவாகும்.

Read more Photos on
click me!

Recommended Stories