50 தொகுதிகளை குறிவைத்து பிளான் போட்ட அமித்ஷா.! ஷாக்காகி நிற்கும் அதிமுக

Published : Jun 09, 2025, 06:55 AM IST

அதிமுக மற்றும் பாமகவில் நிலவும் உட்கட்சி மோதல்கள் கூட்டணி பேச்சுவார்த்தைகளை சிக்கலாக்கியுள்ளன. பாஜக இவ்விரு கட்சிகளுக்குள் சமரசம் ஏற்படுத்த முயற்சிக்கும் அதே வேளையில், அதிமுகவிடம் இருந்து 50 தொகுதிகளைப் பெறவும் திட்டமிட்டுள்ளது.

PREV
15
அதிமுக, பாமக உட்கட்சி மோதல்

தமிழக தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. அந்த வகையில் இன்னும் 10 மாத காலத்திற்கும் குறைவான மாதங்களே இருப்பதால் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரம் தமிழகத்தில் எதிர்கட்சியாக உள்ள அதிமுக, பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதலால் தவித்து வருகிறது. 

அந்த வகையில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும். அப்படி சேர்த்தால் தான் அதிமுக வெற்றி பெற முடியும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் எடப்பாடியோ ஓபிஎஸ், டிடிவி, சசிகலா ஆகியோரை சேர்க்க எந்த வாய்ப்பும் இல்லையென உறுதியாக கூறிவிட்டார்.

25
சமாதான பேச்சுவார்த்தையில் பாஜக

மற்றொரு பக்கம் பாமகவில் தந்தை மகன் இடையே மோதல், இந்த மோதலால் பாமகவினர் அதிர்ச்யில் உள்ளனர். எந்த பக்கம் ஆதரவாக இருப்பது என புரியாமல் திக்குமுக்காடியுள்ளனர். எனவே இந்த பிரச்சனைகளையெல்லாம் திரைமறைவில் சரிசெய்யும் பணியை பாஜக தொடங்கியுள்ளது. அந்த வகையில் ராமதாஸ்- அன்புமணி இடையே சமாதான தூதூவராக ஆடிட்டர் குருமூர்த்தி செயல்பட்டு வருகிறார். இரண்டு முறை ராமதாஸிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே விரைவில் நல்ல அறிவிப்பு வரும் என ராமதாஸே தெரிவித்துள்ளார்.

35
50 தொகுதிகளை குறிவைக்கும் பாஜக

இந்த நிலையில் தமிழகம் வந்த பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா, கூட்டணி தொடர்பாகவும், தேர்தல் பணிகள் தொடர்பாகவும் பாஜக நிர்வாகிகளுக்கு ஆலோசனையை வழங்கியுள்ளார். அந்த வகையில் பாஜக மையக்குழு கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளிடம் பேசியிருக்கும் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 5 தொகுதிகளில் 2ஆம் இடத்தை பிடித்தது. எனவே அந்த மாவட்டங்களில் உள்ள தொகுதிகளை இலக்காக வைத்து பணி செய்ய அறிவுறுத்தியுள்ளார். மேலும் அதிமுகவிடம் இருந்து 50 தொகுதிகளை பெறும் வகையில் களப்பணியை தீவிரம் காட்ட வேண்டும் என கூறியுள்ளார். 

45
கடினமான தொகுதிகளை கேட்டுப் பெறுவதை தவிர்த்திடுங்கள்

நாம் உறுதியாக வெல்லக்கூடிய தொகுதிகளை கணக்கெடுத்து, அதை கேட்டுப் பெற வேண்டும். வாக்கு வங்கி உயர்ந்துள்ளது என்று சொல்லி, கடினமான தொகுதிகளை கேட்டுப் பெறுவதை தவிர்த்திடுங்கள் என ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் அதிமுகவிடம் இருந்து பெறும் 50 தொகுதிகளில் இருந்து அமமுக மற்றும் ஓ.பி.எஸ் தரப்புக்கு சீட்களை நாமே ஒதுக்கிக்கொள்ளலாம். தொகுதி பங்கீட்டின் போது, அதை பற்றி பார்த்துக்கொள்ளலாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

55
அதிமுக தனித்து ஆட்சி அமைக்குமா.?

அதிமுகவிடம் இருந்து பாஜக 50 தொகுதிகளை பெற திட்டமிட்டுள்ள நிலையில், மீதமுள்ள 184 தொகுதிகளில் பாமகவிற்கு குறைந்தபட்சம் 25 தொகுதிகளை ஒதுக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் தேமுதிக, தமாக, புதிய தமிழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட ஒரு சில கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்க வேண்டிய நிலை இருப்பதால் அதிமுக 140க்கும் குறைவான இடங்களில் போட்டியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். இதனால் தேர்தலில் 118 என்ற இலக்கை எட்டி தனித்து அதிமுக ஆட்சி அமைக்குமா.? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories