அதிமுக- பாஜக கூட்டணியில் இணையப்போகுது பாமக.! ராமதாஸ் சொன்ன சூசக தகவல்

Published : Jun 09, 2025, 06:17 AM IST

 திமுக கூட்டணிக்கு எதிராக அதிமுக, பாஜக, பாமக இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பாமகவில் நிலவும் உட்கட்சி மோதலுக்கு பாஜக தலையிட்டு சமாதானம் செய்து வருவதாகவும், கூட்டணி தொடர்பான முடிவை விரைவில் அறிவிப்பார்கள் என தகவல்

PREV
14
தேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் களப்பணியை தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியும் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் திமுகவின் கூட்டணியானது தற்போது வரை தொடர்ந்து வருகிறது. 

எனவே வருகிற சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என திமுக தலைமை தெரிவித்துள்ளது. அதே நேரம் புதிய கட்சிகள் இடம்பெறும் எனவும் கூறிவருகிறது. 2018-ம் ஆண்டு தொடங்கிய திமுக தலைமையிலான கூட்டணி 13 தேர்தல்களை சந்தித்து வெற்றி பெற்றதுள்ளது.

24
கூட்டணியை பலப்படுத்தும் அதிமுக

14வது தேர்தலாக 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. இந்த நிலையில் திமுக கூட்டணியை வீழ்த்த அதிமுகவும் காய் நகர்த்தியுள்ளது. அந்த வகையில் இனி பாஜகவுடன் கூட்டணியே இல்லையென தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, திடீரென அமித்ஷாவை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார். அடுத்ததாக பாமக மற்றும் தேமுதிகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 

அந்த வகையில் ராஜ்யசபா சீட் பிரச்சனை காரணமாக அதிமுக மீது தேமுதிக அதிருப்தியில் உள்ளது. எனவே ஜனவரி மாதம் தங்கள் கூட்டணி தொடர்பான நிலையை அறிவிப்போம் என தெரிவித்து விட்டது. அடுத்ததாக பாமகவில் தற்போது உட்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளது. தந்தை மகன் இடையே நடைபெறும் மோதலில் கூட்டணி தொடர்பாக சிந்திக்காத நிலையில் உள்ளது.

34
உட்கட்சி மோதலால் திணறும் பாமக

அதேநேரம் ராமதாஸ்- அன்புமணி இடையே சமாதான பேச்சுவார்த்தையா பாஜக ரகசியமாக தொடங்கியுள்ளது. பாஜக ஆதரவாளர் ஆடிட்டர் குருமூர்த்தி இரண்டு முறை ராமதாஸை சந்தித்து பேசியுள்ளார். அந்த வகையில் விரைவில் ஒற்றுமை ஏற்படும் என கூறப்படுகிறது. மேலும் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் பாமக இணையும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

இதனை உறுதிப்படுத்தும் வகையில் ராமதாஸ் சென்னையில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அன்புமணியுடன் சமாதானம் ஏற்பட்டு விட்டதா.? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், அன்புமணி உடனான பிரச்சனை சரி செய்யப்படும் சரி செய்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும் என கூறினார்.

44
அதிமுக- பாஜக கூட்டணியில் பாமக

2026ஆம் ஆண்டு தேர்தலில் திமுக வீழ்த்தப்படும் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும் என அமித்ஷா கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், அமித்ஷா சரியாகத்தான் சொல்லி இருக்கிறார் என தெரிவித்தார். அடுத்தாக கூட்டணி குறித்து நேரம் வரும் போது சொல்கிறேன் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

எனவே தற்போதுள்ள சூழ்நிலையில் பாமக அதிமுக கூட்டணியை நோக்கியே பயணப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் எத்தனை தொகுதி என்பது தான் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories