இந்த சூழ்நிலையில் இன்று கோவை திரும்பிய செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நேற்றைய தினம் பயணம் செய்கின்ற பொழுது ஹரித்துவார் செல்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்றேன். டெல்லி சென்றவுடன் எனக்கு உள்துறை அமைச்சரை சந்திக்கின்ற அனுமதி கொடுக்கப்பட்டதாக கூறினார்.
இதனையடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகிய இருவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது தமிழகத்தில் தற்போது உள்ளஅரசியல் சூழல் குறித்து கருத்து பரிமாறப்பட்டதாகவும், மேலும் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்தோடு, இயக்கம் வலிமை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு கருத்துக்களை அவரிடம் எடுத்துச் சொன்னோம் என தெரிவித்தார்.