எனவே பலம் வாய்ந்த கூட்டணியை உறுதி செய்ய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் நாம் தமிழர் கட்சியும் தனி அணியாகவே களத்தில் இறங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பாஜக- அதிமுக, கூட்டணி வலிமைப்படுத்த என்ன செய்யலாம் என ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்தில் தமிழக பாஜக நிர்வாகிகளோடு முக்கிய ஆலோசனை நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மத்திய இணை அமைச்சர் எல் முருகன், தமிழிசை சௌந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், ஹெச் ராஜா, வானதி சீனிவாசன், அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், மூத்த பொறுப்பாளர் அரவிந்த் மேனன் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட தமிழக பாஜகவின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.