விமானத்தில் பறந்தபடி ஸ்டாலின் எழுதிய பரபரப்பு கடிதம்..! எதிர்க்கட்சியினருக்கு சுடச்சுட பதிலடி..!

Published : Sep 03, 2025, 04:17 PM IST

வெளிநாட்டு பயணத்தை விமர்சித்த அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

PREV
16
முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம்

தமிழக முதல்வர் ஸ்டாலின் மாநிலத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, லண்டனுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர் விமர்சனம் செய்திருந்தனர்.

26
ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்த எடப்பாடி

''ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு மேற்கொண்டுள்ள வெளிநாட்டுப் பயணம் முதலீடுகளை ஈர்க்கவா ? அல்லது மீண்டும் குடும்ப முதலீடுகள் செய்யவா? என்ற மக்களின் கேள்விக்கு ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும். மு.க.ஸ்டாலின் முதலீட்டை ஈர்க்கிறேன் என்று 4 முறை வெளிநாடுகளுக்குச் சென்றார். சொல்லும்படியாக ஏதேனும் முதலீட்டை ஈர்த்தாரா? என்றால் இல்லை என்பதே தொழில்துறையினரின் கருத்து'' என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார்.

36
முதலீடுகள் குறித்து ஸ்டாலின் விளக்கம்

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் திமுக உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில், ''ஜெர்மனியின் டசல்டோர்ப் நகரில் ஐந்து நிறுவனங்களுடன் தனித்தனிச் சந்திப்புகள். முதல் நிறுவனமாக உலகப் புகழ்பெற்ற பி.எம்.டபிள்யூ கார் நிறுவனத்துடனான சந்திப்பு. பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகள் குறித்த ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் நடைபெற்றன. அந்த நிறுவனத்தைத் தொடர்ந்து இ.பி.எம் பாப்ஸ்ட், நார்-ப்ரீம்ஸ், நார்டெக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. தமிழ்நாட்டிற்கு 3,201 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

46
இந்தியாவின் ஜெர்மனி தமிழ்நாடு

அதன் பின்னர் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசும்போது. ஜெர்மனியைப் போலவே தமிழ்நாட்டிலும் திறன் மேம்பாட்டு மையங்கள் உருவாக்கப்பட்டு வருவதையும், நிறுவனங்களுக்கேற்ற திறனை ஊக்குவிக்கும் பயிற்சிகள் வழங்கப்படுவதையும் எடுத்துக்கூறி, தொழில்வளர்ச்சிக்கு தேவையான அத்தனை வசதிகளையும் உங்களுடனான ஒரு பார்ட்னர் போல அரசு செய்து தரும் என்ற உறுதியை அளித்து, இந்தியாவின் ஜெர்மனியாக தமிழ்நாடு விளங்குகிறது என்ற நம்பிக்கையை விதைத்தேன்.

56
அரசியலுக்காக வைக்கப்படும் விமர்சனங்கள்

எந்த நாட்டில் முதலீடுகளை ஈர்க்கிறோமோ அந்த நாட்டிற்கு. முதலீட்டாளர் மாநாட்டை நடத்தும் மாநிலத்தின் முதல்-அமைச்சரே நேரில் வந்து முதலீட்டாளர்களிடம் விளக்கும்போதுதான் தெளிவும் நம்பிக்கையும் கிடைக்கிறது. அதன் மூலம் முதலீடுகளை ஈர்க்க முடியும் என்பதற்கு NRW மாநிலத்தில் நடந்த முதலீட்டாளர் மாநாடு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும்.

 வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து அரசியல் காரணங்களுக்காக முன்வைக்கப்படும் விமர்சனங்களைப் புறங்கையால் ஒதுக்கிவிட்டு, தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், தமிழ்நாட்டில் உள்ளவர்களின் வேலைவாய்ப்புக்கும் தேவையான முதலீடுகளை இத்தகைய சந்திப்புகள் மூலம் ஈர்க்க முடிகிறது என்ற நிறைவு உங்களில் ஒருவனான எனக்கு ஏற்பட்டது.

66
விமானத்தில் பறந்தபடி எழுதிய கடிதம்

காலையில் நடந்த நிறுவனங்களுடனான சந்திப்பு, மாலையில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் 26 நிறுவனங்களுடன் 15 ஆயிரத்து 320 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 7,020 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின'' என்று கூறியுள்ளார். ஜெர்மனியிலிருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு விமானத்தில் பறந்து செல்லும் நேரத்தில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன் என்று ஸ்டாலின் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories