திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனாலும் தவெக.வை காப்பாற்ற முடியாது. திமுகவை எதிர்க்கும் விஜய் அதிமுக கூட்டணிக்கு வரவேண்டும் என எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் பகிரங்கமா அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சி தற்போது வலுவான கூட்டயுடன் அசுர பலத்துடன் பயணிக்கிறது. அப்படிப்பட்ட வலுவான கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்றால் அனுபவம் வாய்ந்த அதிமுக.வுடன் தவெக கூட்டணிக்கு வர வேண்டும்.
24
சரியான நேரத்தில் தவறான முடிவெடுத்தவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..
சரியான நேரத்தில் தவறான முடிவெடுத்தவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இளைஞர்களின் ஆதரவோடு கட்சி தொடங்கிய சிரஞ்சீவி தவறான முடிவெடுத்ததால் தான் கட்சியை கழைத்துவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டது. சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்ததால் தான் பவன் கல்யாண் தற்போது துணைமுதல்வராக இருக்கிறார்.
34
வைகோ.வை சுட்டிக்காட்டும் அதிமுக
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கருணாநிதியுடன் மோதல் ஏற்பட்டு திமுக.வில் இருந்து விலகிய போது அவர் பின்னால் லட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டு சென்றனர். ஆனால் அவர் எடுத்த தவறான முடிவுகளால் அக்கட்சி பின்னோக்கி சென்றுள்ளது.
இவ்வளவு ஏன் நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். தப்பித்தவறி திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது. அதே போன்று தவெக.வை ஆண்டவனே நினைத்தாலும் காப்பாற்ற முடியாது” என்று தெரிவித்துள்ளார்.