Jayakumar : ராயபுரத்தில் இருந்து பல்டி அடிக்கும் ஜெயக்குமார்.? புதிய தொகுதிக்கு ஸ்கெட்ச் - காரணம் என்ன.?

Published : Jun 21, 2025, 01:42 PM IST

தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஜெயக்குமார் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்பதில் குழப்பம் நிலவுகிறது. பாஜக கூட்டணியால் ராயபுரத்தில் தோல்வியடைந்த அவர், மைலாப்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புத் தேடுகிறார்.

PREV
15
தேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 முதல் 9 மாதங்கள் மட்டுமே உள்ளது. இந்த தேர்தலுக்கு தயாராகும் வகையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுதியுள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் கடந்த மக்களவை தேர்தலின் போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. 

இதனால் திமுக கூட்டணி பலம் பொருந்திய கூட்டணியாக உள்ளது. அந்த வகையில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளை குறிவைத்து திமுக தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கு ஏற்றார் போல ஒவ்வொரு தொகுதியில் உள்ள நிர்வாகிகளை தனித்தனியாக ஒன் டூ ஒன் ஆலோசனை நடத்தி வருகிறார் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின்.

25
அதிமுகவின் தேர்தல் கூட்டணி கணக்கு

அதே நேரம் திமுகவை வீழ்த்த அதிமுகவும் பல வித கணக்குகளை வகுத்தது. அதன் படி பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்கினால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்ற காரணத்தால் தற்போது புதிதாக அரசியல் களத்தில் இறங்கிய நடிகர் விஜய்யை அதிமுகவோடு கூட்டணி வைக்க காய் நகர்த்தியது. ஆனால் துணை முதலமைச்சர் பதவி, அமைச்சரவையில் இடம், பாதிக்கு பாதி தொகுதிகள் என்ற நிபந்தனைகளால் பின்வாங்கியது அதிமுக, 

இதனையடுத்து கூட்டணியை வலுப்படுத்த என்ன செய்யலாம் என சிந்தித்த அதிமுக, கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது. தற்போது வரை இந்த கூட்டணியில் புதிதாக எந்த கட்சியும் இல்லை.

35
பாமக, தேமுதிக நிலைபாடு என்ன.?

அதே நேரம் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தேமுதிகவோ ஜனவரி மாதம் நடைபெறவுள்ள மாநாட்டில் தான் தங்களது கூட்டணி தொடர்பான முடிவை அறிவிப்போம் என தெரிவித்துள்ளது. பாமகவோ தற்போது உட்கட்சி பிரச்சனையில் சிக்கியுள்ளதால் கூட்டணி தொடர்பாக எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது. எனவே கூட்டணி தொடர்பான முடிவு எடுப்பதில் அதிமுக பின்தங்கியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் அதிமுகவின் மூத்த நிர்வாகியான ஜெயக்குமார் என்ன செய்வது எந்த தொகுதியில் போட்டியிடுவது என்ற குழப்பத்தில் உள்ளார். ஏனென்றால் ஜெயக்குமார் 1991, 2001, 2006, 2011, மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் அதிமுக சார்பில் ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1996 தேர்தலில் மட்டுமே தோல்வியடைந்த ஜெயக்குமார், கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தலிலும் தோல்வி அடைந்தார்.

45
தொகுதி மாற திட்டமிடும் ஜெயக்குமார்

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தி 19,082 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயக்குமாரை தோற்கடித்தார். மூர்த்தி 49,143 வாக்குகளும், ஜெயக்குமார் 30,061 வாக்குகளும் பெற்றனர். இது தொடர்பாக ஜெயக்குமார் கூறுகையில், "25 ஆண்டுகள் ராயபுரத்தில் முடிசூடா மன்னனாக இருந்தேன். தோல்வி என்பதே அறியாதவன் நான். யாரால் தோற்றேன் என்றால், பாஜகவால் தான் தோற்றேன், என்று தெரிவித்தார். 

இந்த நிலையில் மீண்டும் அதிமுக - பாஜகவோடு கூட்டணி அமைத்ததால் அதிர்ச்சியில் உள்ளார் ஜெயக்குமார். முன்பு அடிக்கடி செய்தியாளர்களை சந்தித்து அதிமுக நிலைப்பாடு தொடர்பாக கருத்துகளை கூறி வந்தார். தற்போது எப்போதாவது ஒரு முறை மட்டுமே செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி அமைந்துள்ளதால் ராயபுரத்தில் வெற்றிபெறுவது சிக்கலானது என ஜெயக்குமார் உணர்ந்துள்ளார்.

55
மைலாப்பூர் தொகுதிக்கு ஸ்கெட்ச்

ராயபுரம் தொகுதியில் அதிகளவில் மீனவ மக்களும், இஸ்லாமியர்களும் உள்ளனர். எனவே பாஜக கூட்டணிக்கு எதிராகவே அவர்கள் வாக்களிப்பார்கள் என்பதால் தொகுதியை மாற ஜெயக்குமார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஜெயக்குமார் மைலாப்பூர் தொகுதி மீது தனது பார்வையை திருப்பியுள்ளார். மையலாப்பூர் தொகுதியில் அதிகமான பிராமன மக்கள் இருப்பதாலும், அதிமுக வாக்குகளும் அதிகளவில் இருப்பதால் இந்த தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 இதற்காகவே தற்போது மைலாப்பூர் தொகுதியில் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அதே நேரம் தங்களுக்கு செல்வாக்கு மிக்க தொகுதியாக மைலாப்பூர் உள்ள நிலையில் எப்படி அதிமுகவிற்கு விட்டுக்கொடுக்க முடியும் என பாஜகவினர் போட்டிக்கு நிற்கின்றனர். எனவே தேர்தல் நெருங்கும் நேரத்தில் என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories