Published : Jul 22, 2025, 08:55 AM ISTUpdated : Jul 22, 2025, 10:07 AM IST
திமுக அரசை வீழ்த்த வேண்டும் என்ற ஒத்த கருத்தில் பயணிக்கும் சீமான், விஜய் உள்ளிட்டோர் அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற வாசகத்தோடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், பிரபல தி இந்து ஆங்கில நாளிகழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக பதில் அளித்துள்ளார்.
24
ஒற்றை கட்சி ஆட்சி
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் ஒற்றை கட்சி ஆட்சி தான் நடைபெறும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பதை மக்கள் என்றுமே விருப்பப்பட்டது கிடையாது. அதே நிலை தான் தொடரும். கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக கூட்டணி ஆட்சி என்று பேசுவதை எல்லாம் நாம் பொருட்படுத்த வேண்டியது கிடையாது. அதிமுக கூட்டணி உடையும் என்று நினைப்பவர்களுக்கு ஏமாற்றமே கிடைக்கும். எங்கள் கூட்டணி வெற்றி பெற்று அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தும்.
34
சீமான், விஜய்க்கு அழைப்பு
திமுகவை வீழ்த்த நினைக்கும் யார் வேண்டுமானாலும் எங்களோடு இணையலாம். 1999ல் காங்கிரஸை வீழ்த்த பாஜகவை உள்ளடக்கிய திமுக கூட்டணியில், ஒரே கருத்துடைய கட்சிகள் இணையவில்லையா? அதுபோல தான் இதுவும். அந்த வகையில் திமுக.வை வீழ்த்த வேண்டும் என்ற ஒத்த கருத்தில் பயணிக்கும் சீமான், விஜய் உள்ளிட்டோரும் எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும். நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் மகளிர் உரிமைத் தொகை, பேருந்தில் இலவச பயணம் உள்ளிட்ட திட்டங்களால் பெண்கள் மத்தியில் திமுக.வுக்கு செல்வாக்கு உயர்ந்துள்ளதா என்ற கேள்விக்கு, தாளிக்கு தங்கம், திருமண உதவித்தொகை என ரூ.25000, ரூ.50000 வழங்கியதை திமுக அரசு நிறுத்திவிட்டது. இதனை மக்கள் மறக்க மாட்டார்கள், வரக்கூடிய தேர்தலில் திமுக.வுக்கு பெண்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.