ஏம்மா இருக்கிற பிரச்சினை போதாதா! கோர்த்துவிட்ட பெண் நிர்வாகியால் பதறிய நயினார் நாகேந்திரன்! நடந்தது என்ன?

Published : Jul 21, 2025, 08:41 AM IST

அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் சலசலப்பை சந்தித்துள்ளது. அரியலூர் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் நயினார் நாகேந்திரனை வருங்கால துணை முதல்வர் என்று அழைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
14
அண்ணாமலை

கடந்த சட்டமன்ற தேர்தலை அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில் அப்போது தமிழக பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா குறித்து விமர்சித்ததன் காரணமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. இதனையடுத்து எந்த தேர்தலிலும் இனி பாஜகவுடன் கூட்டணி கிடையாது என எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டு தமிழக அரசியல் அரங்கை அதிரவிட்டார்.

24
அதிமுக-பாஜக கூட்டணி

இதனையடுத்து அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டெல்லி சென்று வந்த எடப்பாடி பழனிசாமி அதிமுக-பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்வதாக இபிஎஸ் மற்றும் அமித் ஷா கூட்டாக அறிவிப்பை வெளியிட்டனர். ஆனால் எப்போது அதிமுக-பாஜக கூட்டணி உருவானதோ அன்று முதலே இரு கட்சிகளுக்கும் இடையே முட்டல்கள் மோதல் இருந்த வண்ணம் உள்ளது. அதாவது அமித்ஷா கூட்டணி ஆட்சி என்பதும் அதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்தது மட்டுமல்லாமல் கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக்கொள்ள நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என்றார்.

34
நயினார் நாகேந்திரன்

கூட்டணி ஆட்சி என்கிற விவகாரம் அதிமுக - பாஜக கூட்டணிக்குள் புயலை கிளப்பியிருக்கும் சூழலில்தான் அரியலூர் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வருங்கால துணை முதல்வரே கூறியது மீண்டும் சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் நடைபெற உள்ள ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்பதற்காக வரும் 27ம் தேதி பிரதமர் மோடி வருகை தருகிறார். இதற்காக மையக்குழு கூட்டம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் பல்வேறு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

44
மாவட்ட பாஜக தலைவர் பரமேஸ்வரி

அப்போது இந்த கூட்டத்தில் வரவேற்புரை வழங்கிய அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் பரமேஸ்வரி நயினார் நாகேந்திரனை வருங்கால துணை முதல்வரே என்று குறிப்பிட்டு வரவேற்றார். இதனை சற்றும் எதிபாராத அவர் பதற்றம் அடைந்தார். துணை முதல்வரே என்றெல்லாம் அழைக்க வேண்டாம் என சைகை காட்டி அறிவுறுத்தினார்.

Read more Photos on
click me!

Recommended Stories