இந்நிலையில் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஆனால் இக்கூட்டத்தை அன்புமணி உள்பட பல பாமக மாவட்ட தலைவர்கள், செயலர்கள் கூட்டத்தை பங்கேற்காமல் புறக்கணித்தனர். இதில் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட ஒருசில நிர்வாகிகள் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். மொத்தமாக 216 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 7 மாவட்டத் தலைவர்கள், 8 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.