Published : May 16, 2025, 11:09 AM ISTUpdated : May 16, 2025, 11:27 AM IST
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் 93.80% தேர்ச்சி விகிதத்துடன் சிவகங்கை மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பல மாணவர்கள் பல்வேறு பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியிடப்படும் கூறிவந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்படும் என்று நேற்று முன்தினம் பள்ளிகல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி காலை 9 மணிக்கு எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
24
இந்தாண்டில் தேர்ச்சி விகிதம் அதிகம்
மொத்தம் 8,71, 239 பேர் தேர்வு எழுதிய நிலையில் 8,17,261 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி சதவிகிதம் 93.80 சதவீதமாகும். வழக்கம்போல் மாணவர்களை விடவும் மாணவிகளே அதிக தேர்ச்சியை பெற்றுள்ளனர். மாணவிகள் 95.48 சதவிகிதமும், மாணவர்கள் 91.74 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்தாண்டை விட இந்தாண்டில் தேர்ச்சி விகிதம் 2.25 சதவீதம் அதிகம்.
34
சிவகங்கை மாவட்டம் முதலிடம்
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 98.31 சதவீதத்துடன் சிவகங்கை மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் விருதுநகர், 3வது இடத்தில் கன்னியாகுமரி, 4வது இடத்தில் திருச்சி, 5வது இடத்தில் தூத்துக்குடி மாவட்டம் உள்ளது. அதேபோல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 4,917 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 1,867 அரசுப் பள்ளிகள் அடங்கும். இந்நிலையில் பாட வாரியாக 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றவர்கள் விவரங்களை பார்ப்போம்.
அதன்படி மொழிப்பாடத்தில் 8 பேர் 100க்கு 100 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 346 பேரும், கணிதப் பாடத்தில் 1,996 பேரும், அறிவியல் பாடத்தில் 10,838, சமூக அறிவியல் பாடத்தில் 10,256 மாணவர்களும் முழு மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். கணிதத்தில் மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெறுவது குறைந்துள்ளது.