இந்தக் கூட்டணி கடந்த சட்டமன்ற தேர்தலில் எத்தனை சதவீதம் வாக்குகள் பெற்றது என ஆய்வு செய்தபோது கிட்டத்தட்ட அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பக்கத்தில் இருப்பது உறுதியாகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி பலமாக உருவெடுத்து வருகிறது. தற்போது தமிழக அரசியலில் மிகவும் வலுவான எதிர்க்கட்சி அணியாக இது கருதப்படுகிறது.
அனைத்து அரசியல் கட்சிகளும் உச்சகட்ட பரபரப்புக்கு ஆளாகி இருக்கிறது. அந்த வகையில் அதிமுக தரப்பில் ஒரு மெகா கூட்டணி அமைந்திருக்கிறது. இந்தக் கூட்டணி இப்போதைய சூழ்நிலையில் திமுகவுக்கு சவால் விடக் கூடிய வகையில் மாபெரும் கூட்டணியாக உருவெடுத்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இதே கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளை பெற்றது எனக் கணக்கீடு செய்து பார்த்தால் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு நிச்சயம் கைகூடும் என்றே தெரிய வருகிறது.
24
வெற்றிக்கு அருகில் அதிமுக கூட்டணி
இப்போதைய அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம், தென்னிந்திய பார்வர்ட் பிளாக், புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பிரதமர் மோடி கலந்து கொண்ட மதுராந்தகம் கூட்டத்தில் ஒரே மேடையில் கைகோர்த்து நின்றனர். இந்தக் கூட்டணி கடந்த சட்டமன்ற தேர்தலில் எத்தனை சதவீதம் வாக்குகள் பெற்றது என ஆய்வு செய்தபோது கிட்டத்தட்ட அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பக்கத்தில் இருப்பது உறுதியாகி இருக்கிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 33.29 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. அதாவது ஒரு கோடியே 43 லட்சத்து 85 ஆயிரத்து 410 வாக்குகள் பெற்றிருந்தது. மொத்தம் 65 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.அதிமுக கூட்டணியில் இருந்து பாரதிய ஜனதா கட்சி 20 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. அதாவது 2.6 சதவீத வாக்குகள் பெற்றிருந்தது. பாட்டாளி மக்கள் கட்சி 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. அதாவது 3.80 சதவீத வாக்குகள் பெற்றிருந்தது.
34
கூட்டணி கட்சிகளின் வாக்கு வங்கி
கூட்டணிக்கு வெளியே போட்டியிட்ட டிடிவி.தினகரன் தலைமையிலான அமமுக 2.4 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. இந்த கட்சி போட்டியிட்ட எல்லா தொகுதிகளிலுமே தோல்வியை தழுவிருந்தது. புதிய நீதி கட்சி ஒரு தொகுதியில் போட்டியி்ட்டது. தோல்வி அடைந்து 0.1-கும் குறைவான வாக்கு சதவீதம் பெற்றிருந்தது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. எல்லா தொகுதிகளிலும் இந்த கட்சி தோல்வியை தழுவியது. புரட்சி பாரதம் கட்சி கீழ்வேளூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது 0.2புள்ளி இரண்டு சதவீதத்திற்கும் குறைவான வாக்கு கிடைத்திருந்தது.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகள் எல்லாம் சேர்ந்து 44 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. இந்த நிலையில் இப்போது அதிமுக, திமுக, தவெக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவும் போது 45 சதவீத வாக்குகள் என்பது அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பை உறுதி செய்யும் தன்மை கொண்டது. ஏற்கனவே முந்தைய தேர்தல் கருத்துக்கணிப்புகளில் திமுக கூட்டணிக்கு 39 சதவீதமும், அதிமுக கூட்டணிக்கு 36 சதவீதம், தமிழக வெற்றி கழகத்துக்கு 15 சதவீதமும் வாக்குகள் கிடைக்கும் எனக் கூறப்பட்டு இருந்தது.
இப்போதைய சூழ்நிலையில் அதிமுக கூட்டணிக்கு பழைய வாக்கு வங்கியை கணக்கிட்டால் 45 சதவீதத்திற்கும் கூடுதலான வாக்குகள் பெற வாய்ப்பு இருக்கிறது. இதனால் திமுக கூட்டணிக்கும், அதிமுக கூட்டணிக்கும் வருகிற சட்டமன்ற தேர்தல் மிகப்பெரிய போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அதிமுக கூட்டணி பலமாக மாறி வருவதால் வெற்றிக் கோட்டை எட்டும் எனக் கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.