ஆவணி மாத சுப முகூர்த்த தினங்களில் பத்திரப் பதிவு செய்ய விரும்புவோருக்கு கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, செப்டம்பர் 4, 2025 அன்று கூடுதல் முன்பதிவு வில்லைகள் வழங்கப்படும்.
சொந்தமாக நிலம் வாங்க வேண்டும். வாடகை வீட்டில் இருந்து சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பலரின் கனவு. எனவே நிலத்தையோ, வீடுகளையோ தேடித்தேடி பார்த்து மக்கள் வாங்கி வருகிறார்கள். அதிலும் கூடவே இருக்க போகிற சொத்தை நல்ல நாளில் பத்திர பதிவு செய்ய வேண்டும் என்பது பலரின் திட்டமாக இருக்கும்.
ஆனால் இதே போல பலரும் சுப முகூர்த்த நாளில் பத்திர பதிவு செய்ய திட்டமிடுவார்கள். ஆனால் பத்திர பதிவு அலுவலகத்தில் கூட்டம் நிரம்புவதால் அந்த நாளில் பத்திர பதிவு செய்யாமல் ஏமாற்றத்தோடு மக்கள் திரும்புவார்கள். இந்த நிலையில் கூடுதல் பத்திர பதிவு டோக்கன்கள் ஒதுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைகக்ப்பட்டு வருகிறது.
24
நல்ல நாளில் பத்திர பதிவு
இதனையடுத்து சுப முகூர்த்தம் உள்ள நல்ல நாளில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கப்படுகிறது. அந்த வகையில் ஆவணி மாதத்தில் பத்திர பதிவு தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
34
ஆவணி மாத பத்திர பதிவு
சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினங்களான 04.09.2025 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
எனவே, ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினங்களான 04.09.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும்
அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது.