அடேங்கப்பா.. இலவசமாக 3 சென்ட் நிலம்.! யாருக்கெல்லாம் தகுதி.? விண்ணப்பிப்பது எப்படி.? வெளியான சூப்பர் தகவல்

Published : Sep 02, 2025, 11:30 AM IST

தமிழக அரசு புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் ஏழை குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தை புதிய விதிமுறைகளுடன் விரிவுபடுத்தியுள்ளது. சிறப்பு வரன்முறையாக சென்னை பெல்ட் ஏரியா உட்பட பல மாவட்டங்களில் 57,084 குடும்பங்கள் பயனடைவார்கள். 

PREV
14
தமிழகத்தில் புறப்போக்கு நிலம்

தமிழகத்தில் புறம்போக்கு நிலங்களான ஆட்சேபனையற்ற அல்லது ஆட்சேபகரமான அரசு நிலங்கள் இவற்றில் நீண்ட காலமாக வசித்து வரும் ஏழை குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு, சமீபத்தில் புதிய விதிமுறைகளுடன் விரிவாக்கப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தின் மூலம் ஆக்கிரமிப்பு செய்து வசிப்பவர்களுக்கு சட்டப்பூர்வ உரிமை வழங்கப்பட்டு, வீடு கட்ட உதவி செய்யப்படுகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான குடும்பங்கள் பயனடைகின்றன. 

24
புதிய விதிமுறைகள் மாற்றம்

அதே நேரம் ஏரி, குளம், ஆறு போன்ற நீர்நிலைகள், நீர்ப்பாசன கால்வாய் பகுதிகள், கோயில் நிலங்கள் ஆகியவற்றில் வசிப்பவர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் பட்டா வழங்கப்படாது.

புதிய விதிமுறையின் படி, சென்னை பெல்ட் ஏரியா (சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள்) மற்றும் பிற மாவட்டங்களில் 57,084 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்படும். இது ஒருமுறை சிறப்பு வரன்முறை திட்டமாக டிசம்பர் 31 வரை அமலில் உள்ளது.

34
தகுதி மற்றும் விதிமுறைகள்

இத்திட்டத்தில் பட்டா பெறுவதற்கான முக்கிய நிபந்தனைகள்: வசிப்பு காலம்: கிராமங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல்; நகர்ப்புறங்களில் (பெல்ட் ஏரியா) 10 ஆண்டுகளுக்கு மேல்.

நில வகை: ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்கள் (கிராம நத்தம், அரசு நஞ்சை-புஞ்சை, தரிசு, கள்ளான்குத்து, பாறை, கரடு). ஆட்சேபகரமானவை (நீர்நிலை, சாலை, மயானம், வாய்க்கால்) தகுதியில்லை.

வருமான வரம்பு: ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.

நில அளவு: கிராமங்களில் 3 சென்ட் அல்லது பயன்படுத்தும் அளவு (எது குறைவோ); நகரங்களில் 1 சென்ட் வரை இலவசம்.

44
விண்ணப்பிப்பது எப்படி.?

விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் சரிபார்ப்பு: eservices.tn.gov.in இல் "அரசு புறம்போக்கு நில விவரம் பார்வையிட" என்பதன் மூலம் உங்கள் நிலத்தின் விவரத்தை சரிபார்க்கலாம்.

விண்ணப்பம்: வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து, ஆதாரங்களை சமர்ப்பிக்கவும். அதிகாரிகள் நிலத்தை ஆய்வு செய்வார்கள்.

பட்டா பதிவிறக்கம்: landeed.com போன்ற தளங்கள் மூலம் பட்டா-சிட்டா PDF பெறலாம் (அதிகாரபூர்வம்).

Read more Photos on
click me!

Recommended Stories