2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ள திமுக, பல்வேறு அணிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளது. சமீபத்தில் திமுகவில் இணைந்த நடிகர் சத்யராஜ் மகள் திவ்யாவுக்கு தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
திமுகவில் இணைந்த ஒரே மாதத்தில் சத்யராஜ் மகளுக்கு ஜாக்பாட்.! முக்கிய பதவியை தூக்கிக் கொடுத்த ஸ்டாலின்
தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக களம் இறங்கியுள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு தொகுதியிலும் தற்போதே தேர்தல் பணியை தொடங்கியுள்ளது. 200 தொகுதி இலக்கு என்ற குறிக்கோளோடு செயல்படாத மாவட்ட செயலாளர்களை மாற்றியும், புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்தும், மாவட்ட அமைப்புகள் மாற்றி அமைத்தும் வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பாளர்களையும் நியமித்துள்ளது. இந்த நிலையில் திமுகவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக இணைந்த நடிகர் சத்யராஜ் மகளுக்கு பதவியை திமுக தலைவர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
24
திமுகவில் நிர்வாகிகளுக்கு புதிய பதவி
இதேபோல பல்வேறு அணிகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன் கான் திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக வி.ஜோசப்ராஜ், துணைச் செயலாளராக கே.அன்வர் அலி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திமுக வர்த்தகர் அணி துணைச் செயலாளராக குன்னம் ராஜேந்திரன், செய்தித் தொடர்பு துணைச் செயலாளராக சூர்யா கிருஷ்ணமூர்த்தி, பா.ச.பிரபு (மதுரை), கொள்கைப் பரப்பு துணைச் செயலாளராக முனைவர் வே.தமிழ்பிரியா (சிவகங்கை மாவட்டம்) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
34
சத்யராஜ் மகளுக்கு புதிய பொறுப்பு
மேலும் திமுக ஆதிதிராவிடர் நலக்குழு தலைவராக மருதூர் ஏ.இராமலிங்கம், துணைச் செயலாளராக கொ.ரமேஷ் (தருமபுரி), இலக்கிய அணி துணைச் செயலாளர்களாக சௌமியன் வைத்தியநாதன் (மயிலாடுதுறை) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர்களாக திவ்யா சத்யராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். பிரபல நடிகர் சத்யராஜின் மகள் தான் திவ்யா, இவர் ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். மகிழ்மதி என்கிற பெயரில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் ஏழை எளிய மக்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை வழங்கி வருகிறார்.
44
தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர்
அரசியலில் ஆர்வம் காரணமாக திமுகவில் கடந்த மாதம் இணைந்தார். ஏற்கனவே பாஜகவில் இணைய திவ்யாவிற்கு அழைப்பு வந்த நிலையில் அதனை மறுத்த அவர் திமுகவில் இணைந்தார். மக்கள் பணி செய்ய வேண்டும் என்பது எனது கனவு. திமுக பெண்களுக்கு மரியாதை தருகின்ற கட்சி எனவும் புகழ்ந்திருந்தார். இந்த நிலையில் திமுகவில் இணைந்து ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில் தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர்களாக திவ்யா சத்யராஜ் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.