Rajinikanth : மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவாரா.? இமயமலை செல்லும் முன் ரஜினி கொடுத்த பரபரப்பு பேட்டி

Published : May 29, 2024, 11:12 AM IST

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்னும் ஒரு 5 நாட்களில் வெளியிடவுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இமயமலைக்கு சென்றுள்ளார். முன்னதாக மோடி மீண்டும் வெற்றி பெறுவரா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.   

PREV
16
Rajinikanth : மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவாரா.? இமயமலை செல்லும் முன் ரஜினி கொடுத்த பரபரப்பு பேட்டி

இமயமலைக்கு ரஜினி பயணம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் பட வெற்றிக்கு பிறகு திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்தார்.  இந்த படத்தில் அமிதாப் பச்சன், ராணா டகுபதி. பகத் ஃபாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

சமீபத்தில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தல் கூலி என்ற திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். கூலி திரைப்பட சூட்டிங் அடுத்த மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

26
Rajinikanth

அபுதாபியில் ரஜினி

இந்த இடைவெளியில் நடிகர் ரஜினிகாந்த கடந்த 10 தினங்களுக்கு முன்பு அபுதாபி சென்றிருந்தார். அங்கு லு லு நிறுவனத்தின் தலைவர் யூசுப் அலி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை தனது சொந்த ரோல்ஸ் ராய்ஸ் காரில் அழைத்துச் சென்று அமீரகத்தில் பல இடங்களை சுற்றிக்காட்டினார்.  அமீரகத்தில் உள்ள பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபல தொழிலதிபர்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நட்பு ரீதியாக உரையாடினார்.
 

36

அபுதாபி கோயிலில் ரஜினி

இதனையடுத்து அபுதாபுயில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிஏபிஎஸ் இந்து கோயிலுக்கு சென்றார். தொடர்ந்து  அபுதாபியில் உள்ள ஷேக் சையத் பிரம்மாண்ட மசூதிக்கும் சென்று ரஜினி பார்வையிட்டார்.

46
Rajinikanth in UAE

ரஜினிக்கு கோல்டன் விசா

இதனிடையே அமீரக அரசு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்குமிகவும் உயரிய கௌரவங்களில் ஒன்றான கோல்டன் விசாவை வழங்கி  சிறப்பித்துள்ளது. இதனையடுத்து நேற்று அபுதாபியில் இருந்து சென்னை திரும்பினார்.

56

இமயமலைக்கு புறப்பட்ட ரஜினி

இந்தநிலையில் இன்று காலை இமயமலைக்கு நடிகர் ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார். முன்னதாக போயஸ்கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினியிடம், செய்தியாளர்கள் அடுத்தடுத்து கேள்வி எழுப்பினர். அதில்

ஆன்மிப பயணமாக இமயமலைக்கு பயணம் எப்படி உள்ளது.? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ஒவ்வொரு வருடமும் போகிறேன். கேதர்நாத், பாபாஜி குகை போன்ற இடங்களுக்கு செல்லவுள்ளேன் என தெரிவித்தார். 

66

மீண்டும் மோடி வெற்றி பெறுவாரா.?

இதனையடுத்து அடுத்த கேள்வியாக  மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சாரி அரசியல் தொடர்பான கேள்வி கேட்காதீங்க என தெரிவித்தார். 

அடுத்ததாக இசையா.? கவிதையா என்ற போட்டி தமிழ் திரைப்பட உலகில் உள்ளது தொடர்பான அடுத்த கேள்விக்கு அண்ணா நோ கமெண்ட்ஸ் என தெரிவித்தார். இறுதியாக வேட்டையன் படம் சூட்டிங் முடிந்துள்ளது எப்படி வந்துள்ளது படம் என்ற கேள்வி நன்றாக வந்திருப்பதாக தெரிவித்தார். 
 

Read more Photos on
click me!

Recommended Stories