விழுப்புரம் கூட்டேரிப்பட்டி சாலையில் பேய் நடமாட்டம்.! வெளியான திகில் வீடியோ- உண்மை என்ன.?

First Published | Nov 11, 2024, 12:26 PM IST

விழுப்புரத்தில் பேய் நடமாட்டம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வைரலான நிலையில், தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. 

பேய் பட ரசிகர்கள்

பேய் என்ற வார்த்தையை கேட்டாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் நடுங்குவார்கள். அதனையே கதையாக வைத்து தமிழ் படங்கள் முதல் ஹாலிவுட் வரை பல  படங்கள் வந்து பணத்தை வாரி குவித்துள்ளது. அந்த அளவிற்கு திகில் பட ரசிகர்கள் ஏராளம். தற்போது தமிழில் வந்த டிமாண்டி காலனி சக்கை போடு போட்டது. அந்த அளவிற்கு பேய் ரசிகர்கள் பலர் உண்டு. இந்த நிலையில் பேய் உள்ளதா.? இல்லையா என விவாதங்கள் நடைபெறும். இறந்த ஒருவரின் ஆவிதான் பேயாக வருவதாக நம்பப்படுகிறது. 

ghost

பேய் இருப்பது உண்மையா.?

அந்த வகையில் பல இடங்களில் பேய் நடமாட்டம் உள்ளதாகவும், பாழடைந்த வீட்டில் பேய் குடியிருப்பதாகவும் கூறுவார்கள். மேலும் சாலையில் செல்லும் போது திடீரென  வெள்ளை உடை உடுத்தி அவ்வப்போது ஓட்டுநர்களை கதிகலங்க வைக்கும் நிகழ்வுகளின் வீடியோக்களும் சமூகவலைதளத்தில் குவித்து கிடக்கிறது. அப்படிப்பட்ட நிகழ்வுதான் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டியில்  பேய் நடமாடுவது போன்ற வீடியோக்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் பரவியது. 

Tap to resize

பேய் வீடியோ உண்மையா.?

இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சம் அடைந்தனர். இரவு நேரத்தில் அந்தப் பகுதியில் செல்லவே பயந்து நடுங்கினர். இந்த செய்தி சமூக வலைதளத்தில் பரவிய நிலையில் இதை உண்மையா என்ற கேள்வி எழுந்திருந்தது. இதற்கு தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. 

அதில் பேய் நடமாடுவதாக பரப்பப்படும் புகைப்படம் மற்றும் காணொளி கடந்த ஜூலை மாதம் உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதியில் நடந்ததாக கூறி பரவிய வீடியோ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உண்மை கண்டறியும் குழு தகவல் என்ன.?

இந்த வீடியோ குறித்து விசாரணை நடத்திய அந்த மாநில போலீசார் பேய் நடமாட்டம் இருப்பதாக கூறப்படும் சம்பவம் பொய்யானது என விளக்கம் அளித்தனர்.  தற்போது அதே வீடியோ  விழுப்புரத்தில் நடப்பதாக கூறி பரவி வருவதாகவும், இது முழுக்க வதந்தி என உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளளது.

Latest Videos

click me!