ஒரே கிளிக்கில் வீடு தேடி வரும் உணவு
நவீன யூகத்திற்கு ஏற்ப தொழில் நுட்ப வளர்ச்சியும் வேகமாக வளர்ந்து வருகிறது. அந்த வகையில் உட்கார்ந்த இடத்தில் இருந்து தேவையான பொருட்களை ஆர்டர் செய்தால் கைக்கு அடுத்த ஒரு சில நாட்களில் வந்து விடும். இதுவே அடுத்த கட்ட வளர்ச்சியாக உணவுகளும், காய்கறி மற்றும் மளிகை பொருட்களும் ஸ்விகி, ஜோமட்டோ மூலமாக வீட்டிற்கே வந்தே சுடச்சுட கொடுக்கப்படுகிறது. ஆர்டர் செய்த அடுத்த 15 நிமிடங்களில் வீட்டிற்கே வந்து கொடுக்கவில்லையென்றால் பணம் கொடுக்க வேண்டிய தேவையில்லை என பரபரப்பாக கொடுக்கப்படும் தள்ளுபடி விளம்பரத்தாலும் அதிரடி அறிவிப்புகளாலும் நாள் தோறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.