மாணவர்களுக்கு குஷியோ குஷி.! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை

First Published | Jan 19, 2025, 11:09 AM IST

தமிழக பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் கலைத்திறனை வளர்க்கும் விதமாக பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது. வெற்றி பெறும் மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் வெளிநாட்டுக் கல்விச் சுற்றுலா வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

school student

மாணவர்களுக்கு நவீன கால கல்விமுறை

நவீன காலத்திற்கு ஏற்ப கல்வி முறையும் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை தமிழக பள்ளிக்கல்வித்துறையால் செயல்படுத்தப்படுகிறது.

அதன் படி கல்விக்கு மட்டுமில்லாமல் கலை திறமையை வளர்க்கவும், ஊக்குவிக்கவும் போட்டிகள் நடத்தப்படுகிறது. வட்டார,நகர, மாநில அளவிலான போட்டிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த போட்டியில் பாடல், நடனம், மிமிக்ரி என பல தலைப்புகளில் மாணவர்கள் தங்களது திறமையை காண்பித்து வருகிறார்கள்.

School art function

மாணவர்களின் கலைத்திறமை

இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கலையரசன், கலையரசி விருதுகள் வழங்கப்படுகிறது. மேலும் வெளிநாட்டிற்கு கல்வி சுற்றுலாவிற்கும் மாணவர்கள்  அழைத்து செல்லப்படுகின்றனர். இந்த நிலையில் மாணவர்களுக்கு வெளி உலகம் தெரியும் வகையில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டும் வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மாணவர்கள் தாங்கள் வாழும் சூழலை புரிந்து கொள்ளுதல், பல்வேறு கலாச்சாரங்களின் தனித்தன்மையை அறிந்து கொள்ளுதல், பாலின சமத்துவம் உணர்தல் ஆகிய படைப்பாற்றலை மாணவர்களுக்கு தெரிந்து கொள்ளும் வகையிலும் வெளிக்கொண்டு வரும் வகையிலும்  சிறார் திரைப்படம் பள்ளிகளில் திரையிடப்பட்டு வருகிறது. 

Tap to resize

children film

பள்ளிகளில் சிறார் திரைப்படம்

அந்த வகையில்  ஒவ்வொரு மாதமும், இரண்டாவது வாராத்தில் சிறார் திரைப்படம் திரையிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  ஒவ்வொரு மாதமும் திரையிடப்படவுள்ள திரைப்படம் முன்கூட்டியே மாதத்தின் முதல் வாராத்தில் EMIS வழியே தலைமையாசிரியருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 அனைத்து மாணவர்களும் திரைப்படத்தை காண்பதற்கு நல்ல காற்றோட்டத்துடன் போதுமான இடவசதி உள்ள அறையை தெரிவு செய்ய வேண்டும் எனவும்  பள்ளி மாணவர்கள்  சிறந்த திரைப்பட அனுபவத்தை பெற ஏதுவாக, வெளிப்புற ஒளி குறைவாக இருப்பதையும் போதுமான காற்றுவசதி உள்ளதையும் உறுதி செய்திடல் வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

'Dream of Trees'

'மரங்களின் கனவு'

அதன் படி,  இந்த மாதம் 'மரங்களின் கனவு' என்ற தலைப்பில்  தமிழ் மொழிபெயர்ப்பு குறும்படம் பள்ளிகளில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அந்த குறும்படத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை முன்வைத்து  படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஒளிபரப்பு செய்வதற்கான 'லிங்க்', பள்ளிகளுக்கு தற்போது அனுப்பப்பட்டுள்ளது.

இதனை முன்கூட்டியே பதிவிறக்கம் செய்து, Pen drive அல்லது DVDல் சேமித்து வைத்து Hi-tech lab/TV/Projector/Smart Board (Speaker) மாணவர்களுக்கு திரையிட வேண்டும். மாணவர்கள் திரைப்படங்களை பார்க்கும் வகையில் கண்காணித்து ஒருங்கிணைக்க பள்ளிகளில் பொறுப்பு ஆசிரியரை நியமிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

student happy

வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

மாணவர்களுக்கு திரைப்படத்தை திரையிடுவதற்கு முன்பாக தலைமை ஆசிரியர்கள் அல்லது பொறுப்பாசிரியர்கள் படத்தை பார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் பாடவேளையின் போது படத்தை திரையிட வேண்டும் எனவும்  இந்த பணிகளை கண்காணித்து ஒருங்கிணைக்க பள்ளிகளில் பொறுப்பு ஆசிரியரை நியமிக்க வேண்டும். என கூறப்பட்டுள்ளது.

மேலும் சிறார் திரைப்படம் தொடர்பாக கதை சுருக்கத்தை படித்து, படத்தின் அடிப்படை பின்னணியை மாணவர்களுக்கு  பொறுப்பாசிரியர்கள் விளக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  சிறார் திரைப்பட விழாவில் சிறந்து விளங்கும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!