chennai rain
வட கிழக்கு பருவமழை
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழையால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இயல்பை விட நல்ல மழை பெய்தது. இதனால் ஏரி, குளம் என நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் நிறைந்தது. அந்த வகையில் டிசம்பர் - ஜனவரி முதல் வாரத்தோடு மழை பெரும்பாலான மாவட்டங்களில் நின்று விட்டது.
இந்த நிலையில் வட கிழக்கு பருவமழையின் இறுதி கட்ட மழை நேற்று இரவு முதல் வெளுத்த வாங்க தொடங்கியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் கூறுகையில்,
தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
மீண்டும் கன மழை
இதன் காரணமாக தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
டெல்டா டூ சென்னை - கன மழை
இந்த நிலையில் நேற்று இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மழையானது வெளுத்து வாங்கி வருகிறது. விடாமல் பெய்த மழையால் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கியது. பொங்கல் பண்டிகை முடிந்து பேருந்து மற்றும் ரயிலில் சென்னை திரும்பிய மக்கள் வீட்டிற்கு செல்லமுடியாமல் அவதி அடைந்தனர். மழை தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று வரை மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளார். குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மிக மிக கனமழை பெய்யும் என குறிப்பிட்டுள்ளார்.
heavy rain
மயிலாடுதுறை கன மழை
சென்னை - வேலூர் முதல் டெல்டா வரை தூத்துக்குடி பகுதி வரை தமிழகம் முழுவதும் மழை பெய்யும் என தெரிவித்துள்ளார். சென்னையில் ஞாயிறு மதியம் அல்து மாலை வரை மிதமான மழை பெய்யும் என கூயியுள்ளார். மயிலாடுதுறை பெல்ட்டில் மிக கனமழை பெய்து வருகிறது, இந்த மாவட்டத்தில் இருந்து மிக அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், திருவாரூர், நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருவதாகவும் கூறியுள்ளார்
Chennai Rain
சென்னையில் இன்று மாலை வரை மழை
பொங்கலுக்கு முன்பு பெய்த மழையை விட இந்த மழை அதிகமா இருக்கு. அறுவடையை விவசாயிகள் பாதுகாப்பாக பார்த்துக் கொள்வார்கள் என நம்புவதாக கூறியுள்ளார். இந்த மழையில் தென் தமிழகம் விரைவில் இணையும் எனவும் அதேபோல வழக்கம் போல் மாஞ்சோலை சுற்றுப்பகுதிகளில் கவனம் முக்கியமு என குறிப்பிட்டுள்ளார். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்குள் அடர்த்தியான் மழை மேகங்கள் நகர்ந்து வருவதாகவும் இதனால் கன மழை பெய்யும் என கூறியுள்ளார்.