Gym Master
சென்னை யானைகவுனி பகுதியை சேர்ந்தவர் சூர்யா (25). இவர் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல ஜிம் ஒன்றில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். அப்போது ஓட்டேரியை சேர்ந்த 32 வயது பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். உடல் எடையை குறைப்பதற்காக ஜிம்மிற்கு வந்துள்ளார். இவரது கணவர் வெளி மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஜிம்மிற்கு வந்த பெண்ணுக்கு பயிற்சியாளர் சூர்யாவுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.
illegal love
இதையடுத்து ஜிம் நிர்வாகத்திற்கு சூர்யாவின் நடவடிக்கைகள் சரியில்லாததால் அவரை கடந்த நவம்பர் மாதம் பணியில் இருந்து நீக்கிவிட்டனர். அந்த பெண்ணும் சூர்யா உடனான தொடர்பை துண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சூர்யா அடிக்கடி அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்று அவரிடம் தன்னுடன் மீண்டும் பழகுமாறு வற்புறுத்தி தொல்லை கொடுத்துள்ளார். ஆனால், அந்த பெண் அவரிடம் பேச மறுத்துள்ளார்.
love toucher
மேலும், ஆத்திரமடைந்த சூர்யா கடந்த 13ம் தேதி ஜிம்முக்கு சென்று அந்த பெண்ணை கீழே அழைத்து வந்து, மீண்டும் தன்னிடம் பழக வேண்டும் இல்லையெனில், இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை, சமூக வலைத்தளங்களிலும், உனது குடும்ப உறுப்பினர்களுக்கும் அனுப்பி விடுவேன் என மிரட்டியுள்ளார். அது மட்டுமல்லாமல் அந்த பெண்ணை கன்னத்தில் அடித்து, பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.
gym master Arrested
இதனால் பாதிக்கப்பட்ட பெண் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து ஜிம் பயிற்சியாளர் சூர்யா மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.