27ம் தேதி வரை தான் டைம்! பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு!

First Published | Jan 18, 2025, 9:32 PM IST

தமிழகத்தில் எமிஸ் மற்றும் யுடைஸ் மூலம் மாணவர் தகவல்கள் கண்காணிக்கப்படுகின்றன. மாற்றுச்சான்றிதழ் பெற்ற மாணவர்களின் விவரங்களை சேகரித்து வட்டார வள மையத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

EMIS

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தகவல்களை எமிஸ் (Education Management Information System) எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் மூலம் ஆன்லைனில் பள்ளிக் கல்வித்துறை பராமரித்து வருகிறது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளின் அடிப்படையான விவரங்கள், கல்வி உதவித்தொகை, மதிப்பெண்கள், அரசின் நலத்திட்ட உதவிகள், கலை திருவிழாக்களில் பங்கேற்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பதிவேற்றம் செய்யப்படுகிறது. 

Kalanjiyam

அதேபோல் அரசு ஊழியர், ஆசிரியர்கள் விடுப்பு, சரண்டர் விடுப்பு, பே சிலிப் பதிவிறக்கம், பி.எப். உள்ளிட்ட பணப் பலன்கள் நிலரவம் என அனைத்து விவரங்களும் களஞ்சியம் செயலியில் இடம் பெற்றுள்ளன. மற்றொரு இணையதளமான யுடைஸ் எனும் இணையதளம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. 


UDISE

இந்த இணையதளத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர் விபரங்கள் யுடைஸ் எனும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதில் ஆண்டுதோறும் பள்ளிகளில் புதிதாக சேரும் மாணவர், பள்ளியை விட்டு மாற்றுச்சான்றிதழ் பெற்றுச்செல்லும் மாணவர் விபரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. பள்ளிகளில் இருந்து மாற்றுச்சான்றிதழ் பெறும் மாணவர், ட்ராப் பாக்ஸ் எனும் பட்டியலில் வைக்கப்படுகின்றனர். இவர்கள் வேறு பள்ளியில் புதிதாக சேரும்போது அந்த பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றனர்.

School Student

நடப்பு கல்வியாண்டில் இறுதி செய்யப்பட்ட ட்ராப் பாக்ஸ் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதை அடிப்படையாக வைத்து பள்ளியில் சேர்த்தல் பதிவு விடுபட்டிருந்தால், அவற்றை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை மாற்றுச்சான்றிதழ் பெற்று, இதுவரை வேறு பள்ளிகளில் சேராத மாணவர் விபரம், தொடர்பு எண் உள்ளிட்டவற்றை சேகரித்து, அந்தந்த வட்டார வள மையத்தில் வரும் 27ம் தேதிக்குள் சமர்ப்பிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Latest Videos

click me!