ஜாக்பாட்! பொங்கல் முந்தைய நாளும் லீவு! பள்ளி மாணவர்களுக்கு மொத்தம் 6 நாட்கள் விடுமுறை!

First Published | Dec 21, 2024, 6:24 PM IST

Pongal Festival School Holidays: ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 13ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய ஜனவரி 25ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Arudra Darshan

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்ற வார்த்தையே கேட்டாலே அளவில்லாத குஷிதான். அதுவும் தொடர் விடுமுறை என்றால் சொல்லவே வேண்டாம். இந்நிலையில் பொங்கல் பண்டிகையின் முந்தைய நாளான  ஜனவரி 13ம் தேதி அன்று ஆருத்ரா தரிசனம் திருவிழாவை முன்னிட்டு ராமதாநாதபுரம் மாவட்டத்திற்கு  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

School Holiday

அதில் ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், திரு உத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள ஸ்ரீமங்களநாத சுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழாவை முன்னிட்டு 2025ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி அன்று  ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்? அரையாண்டு விடுமுறை ரத்தா? உண்மை என்ன?


Government Employee

அன்றைய தினம் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 25ம்  சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று கல்வி நிறுவனங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்கள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Government Office

இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், ஜனவரி 13ம் தேதி திங்கள்கிழமை அன்று ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க:  மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அரையாண்டு தேர்வு எப்போது? வெளியானது முழு அட்டவணை!

Pongal Festivel Holiday

ஏற்கனவே ஜனவரி 14 செவ்வாய்கிழமை தை பொங்கல், ஜனவரி 15 புதன் திருவள்ளுவர் தினம், ஜனவரி 16 வியாழன் உழவர் திருநாள்  என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இடையில் ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிறு வார விடுமுறை வந்துவிடுகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜனவரி 13ம் தேதியன்று ஆருத்ரா தரிசனம் திருவிழா முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மொத்தம் பள்ளி மாணவர்களுக்கு 6 நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளதால் மாணவர்கள் குஷியில் துள்ளி குத்திக்கின்றனர். 

இதையும் படிங்க:   கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உடல் நசுங்கி பலி! நடந்தது என்ன?

Latest Videos

click me!