கோவில் உண்டியலில் உங்களது மொபைல் கை தவறி விழுந்தால் யாருக்கு சொந்தம்? அமைச்சர் சொல்வது என்ன?

First Published | Dec 21, 2024, 1:55 PM IST

திருப்போரூர் கந்தசாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் போது ஐபோன் கிடைத்தது. செல்போன் உரிமையாளர் அதை திரும்பப் பெற முயன்றபோது, கோயில் நிர்வாகம் அனைத்து பொருட்களும் முருகனுக்கே சொந்தம் என்று கூறி மறுத்துவிட்டனர்.

Kandaswamy Temple

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூரில் மிகவும் பிரசித்த பெற்ற கந்தசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சென்னை மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக செவ்வாக்கிழமைகளில் இந்த கோவிலில் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு பிறகு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜலட்சுமி, செயல் அலுவலர் குமரவேல் முன்னிலையில்  உண்டியல் திறந்து காணிக்கைகள் எண்ணப்பட்டன.

Kandaswamy Temple Thiruporur

இதில் தாலி, கண்மலர், வேல், பண முடிப்பு, சில்லறை நாணயங்கள், 500 ரூபாய் நோட்டுக்கள் என மொத்தம் 52 லட்சம் ரூபாய் ரொக்கம், 289 கிராம் தங்கமும், 6920 கிராம் வெள்ளியும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். பணம் எண்ணிக் கொண்டிருந்தபோது உண்டியலில் விலை உயர்ந்த ஐபோன் ஒன்று கிடைத்துள்ளது. அது யாருடைய செல்போன் என்று விசாரணை நடத்தியதில் சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவரது தெரியவந்தது. இவர் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் (சிஎம்டிஏ) பணிபுரிபவர் என்பதும் தெரியவந்துள்ளது.

Tap to resize

Kandaswamy Temple News

தினேஷ் அக்டோபர் மாதம் 18ம் தேதி குடும்பத்துடன் கோயிலுக்கு வந்த போது, பணம் போட முயன்ற போது செல்போன் உண்டியலில் விழுந்துவிட்டதாக கோயில் நிர்வாகத்திடமும், அறநிலையத்துறை இடமும் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து அவருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவரும் உண்டியல் என்னும் இடத்திற்கு வந்து செல்போனை பெற முயன்ற போது, கோவில் நிர்வாகத்தினர் உண்டியலில் போட்ட அனைத்து பொருட்களும் முருகனுக்கே சொந்தம் என்று கூறினர்.  உங்களுக்கு செல்போன் கொடுக்க முடியாது வேண்டுமென்றால் உங்களுடைய தரவுகள் வேறு செல்போனுக்கு மாற்றிக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளனர்.  

Mobile phone

ஏற்கனவே இவர் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையில், மனு அளித்து எனது செல்போனை மீட்டுக் கொடுக்கும்படி மனு அளித்துள்ளேன் என தெரிவித்ததை தொடர்ந்து, உரிய விசாரணை நடத்தப்பட்டு அதன் பிறகு செல்போன் ஒப்படைப்பது குறித்து அதிகாரிகள் முடிவு எடுப்பார்கள் என கூறி அவரை திருப்பி அனுப்பினர்.

Minister Sekar babu

இதனிடையே கந்தசுவாமி கோயிலில் உண்டியல் பெட்டியில் பக்தரின் ஐபோன் விழுந்த சம்பவம் குறித்து அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார். கோயில்களின் நன்கொடைப் பெட்டிகளில் விழும் எந்த பொருளும் தெய்வக் கணக்கில் காணிக்கையாகக் கருதப்படும் என்று அவர் தெளிவுபடுத்தினார். இந்த விதிக்கு ஏதேனும் சட்ட விதிவிலக்குகள் உள்ளதா என்பதை அறிய விசாரணை நடத்தப்படும். அத்தகைய விதிவிலக்குகள் இருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாத்தியமான தீர்வுகளைப் பற்றி விவாதித்து அதற்கேற்ப முடிவெடுப்பார்கள் என தெரிவித்துள்ளார். 

Latest Videos

click me!