GOLD RATE
இந்தியாவில் தங்கம் மிகவும் ஆடம்பரமான பொருளாக உள்ளது. இந்திய மக்கள் தங்க நகை மீது அதிகளவு ஈர்ப்பு கொண்டுள்ளதாலும், தங்கத்தின் மீது முதலீடு செய்து வருவதாலும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திருமண நிகழ்வுகள், விஷேச நாட்களில் தங்கம் விற்பனை மிகவும் அதிகமாக இருந்து வருகிறது.
Today Gold Rate
தங்கத்தின் விலை
தங்கத்தின் விலை மிகவும் உச்சத்துக்கு செல்லும் என்பதால் இப்போதே பலரும் அதிகளவு தங்கத்தை வாங்கிக் குவித்து வருகின்றனர். இந்த ஆண்டு தொடக்கம் முதலே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் அடுத்த 14 ஆண்டுகளில் தங்கத்தின் விலை பெரும் உச்சத்தை தொட்டுள்ளது.
அதாவது கடந்த அக்டோபர் மாதம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.59,640 என்ற நிலையை அடைந்தது. அதன்பிறகு 4 ஆயிரம் ரூபாய் வரை குறைந்து பெண்களுக்கு நிம்மதியை அளித்தது. இதன்பிறகு கடந்த மாதங்களாக தங்கத்தின் விலை சற்று ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது. இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
UPI மோசடிகளை தடுக்க உதவும் பாரத்பே 'ஷீல்டு; எப்படி ஆக்டிவேட் செய்வது?
Gold Rate Price Hike
அதிரடி விலை உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.7,100க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.56,800 க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.99க்கு விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.56,320க்கு விற்பனையான தங்கம் இன்று விலை அதிகரித்து இருப்பது பெண்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.