Tamilnadu Goverment
தமிழ்நாடு அரசு பெண்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாதம்தோறும் இல்லத்தரசிகளுக்கு உரிமைத் தொகை, பேருந்தில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம், பணிபுரியும் பெண்களுக்கு தோழிகள் விடுதி என சிறப்பான திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த வகையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சிப்காட் தொழில் பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்களை தொடங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் உள்ள மகளிர் முன்னேற்றம் கருதி பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, மேலும் ஒரு முக்கியத் திட்டமாக தொழிற்சாலைகளில் வேலைக்குச் செல்லும் பெண்கள் முன்னேற்றத்திற்காக, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சிப்காட் தொழில் பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்களை தொடங்கிட திட்டமிட்டுள்ளது.
Tamilnadu Goverment Scheme
இந்த குழந்தைகள் காப்பகங்கள், பணிபுரியும் பெற்றோரின், குறிப்பாகப் பெண்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், பெண் தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றக்கூடிய சூழலை உருவாக்கவும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மூலம் 17 தொழில் பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்கள் தொடங்கப்பட உள்ளன. ஏற்கனவே 13 தொழிற்பூங்காக்களில் 63 குழந்தைகள் காப்பகங்கள் பல்வேறு தொழிற்சாலைகள் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் பயனாக ஏறத்தாழ 1 இலட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
குழந்தைகள் 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி இந்த காப்பகங்கள் வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் தொழிற்சாலைகளில் கவலையின்றிப் பணியாற்றுவதற்கான உருவாக்கிட உதவும் சூழல்களை இந்த 17 தொழிற் பூங்காக்களில் புதிதாக ஏற்படுத்தப்படும் குழந்தைகள் காப்பகங்களில் ஏறத்தாழ 3 இலட்சத்து 23 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் சென்னையில் உள்ள இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்ந்த பெண்கள் நிறுவனத்துடன் (FICCI) இணைந்து பணியாற்ற உள்ளது.
'சாய அரசியலை நிறுத்துங்கள்'; 'ஆளுநரின் செயலால் நிர்வாகம் பாதிப்பு'; தமிழக அரசு பரபரப்பு குற்றச்சாட்டு!
Scheme for working women
இத்திட்டத்திற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் உருவாக்கும். சென்னையில் உள்ள இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் பெண்கள் அமைப்பு காப்பகங்களைச் செயல்படுத்தி பராமரிக்கும் பணிகளை மேற்கொள்ளும். குழந்தைகள் காப்பகங்கள் 2017-ஆம் ஆண்டு மகப்பேறு நன்மைச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் செயல்படும்'' என்று கூறப்பட்டுள்ளது.
Scheme for child
இந்த திட்டம் குறித்து பேசிய தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, ''தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம். 17 தொழிற் பூங்காக்களில் குழந்தைகள் காப்பக வசதியை அறிமுகப்படுத்துவது உழைக்கும் பெண்களின் குறிப்பாக, தாய்மார்களின் தனிப்பட்ட பணிச்சுமையைக் குறைப்பதற்கான மற்றொரு சிறப்பான திட்டமாகும்.
இடு வேலைக்குச் செல்லும் பெண்களின் வேலை மற்றும் தனிப்பட்ட பொறுப்புகளைச் சமநிலைப்படுத்துவதோடு அவர்களின் பொருளாதாரம் மேம்படுவதற்கும் உதவுகிறது.பணிச்சூழலை மேம்படுத்துவதன் மூலம் பெண் தொழிலாளர்களின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு பாலின சமத்துவத்தையும் மேம்படுத்துகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
கொங்கு பிரியாணி முதல் மதுரை கறி தோசை வரை கமகமக்கும் உணவு திருவிழா: வெறும் ரூ.20 முதல்