வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; தமிழ்நாட்டில் மழை இருக்குமா? வானிலை ஆய்வு மையம் என்ன சொல்கிறது?

First Published | Dec 21, 2024, 1:56 PM IST

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tamilnadu Rains

தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சில நாட்களுக்கு முன்பு கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இப்போது தென் மாவட்டங்களில் மழை சற்று ஓய்வெடுக்கும் நிலையில், சென்னையின் நகரின் பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்து இருந்தது.

Heavy rain in Tamilnadu

இதற்கிடையே மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக டிசம்பர் 23ம் தேதி முதல் சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர். மேலும் 26ம் தேதி மீண்டும் ஒரு காற்றழுத்த பகுதி உருவாக இருப்பதாவும் கூறியிருந்தனர்.

ரூ.1000 கோடிக்கு தரமில்லாத ரேஷன் பொருள் வாங்கப்பட்டதா? உண்மை என்ன?
 

Tap to resize

Chennai Rains

இந்நிலையில், வங்க்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு வடகிழக்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக வலுவிழக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது இப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 390 கி.மீ. தொலைவிலும்,  விசாகபட்டினத்தில் இருந்து 430 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில்  ஆந்திரா தமிழ்நாடு கடற்கரை நோக்கி நகர்ந்து வலுவிழக்கும் என கூறப்பட்டுள்ளது. 

Heavy Rain

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, நாகப்பட்டினம் காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டிசம்பர் டிசம்பர் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை தமிழ்நாட்டின் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் வேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நகைபிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தங்கம்; அடேங்கப்பா! ஒரே நாளில் இவ்வளவு விலை உயர்வா?

Latest Videos

click me!