Published : Aug 01, 2025, 12:29 PM ISTUpdated : Aug 01, 2025, 12:33 PM IST
சென்னையில் வெங்காயத்தின் வரத்து அதிகரிப்பால் விலை சரிந்துள்ளது. 5 கிலோ வெங்காயம் ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை சற்று அதிகரித்துள்ளது.
சமையலுக்கு முக்கியம் காய்கறிகள், அது அசைவமாக இருந்தாலும் சரி சைவமாக இருந்தாலும் கண்டிப்பாக காய்கறிகள் தேவை, அந்த வகையில் மற்ற காய்கறிகளை விட தக்காளி மற்றும் வெங்காயம் தான் அதிக தேவையானது உள்ளது. காய்கறி சந்தையில் எந்த காய்கறிகளை வாங்குகிறார்களோ இல்லையோ தக்காளி மற்றும் வெங்காயத்தை அதிகளவு வாங்குகிறார்கள்.
ஏனென்றால் ரசம் முதல் பிரியாணி வரை எந்த வித சமையலாக இருந்தாலும் வெங்காயம், தக்காளியின் பங்கு முக்கியமானது. இந்த இரண்டும் தான் சுவையையும், ருசியையும் சமையலில் கொடுக்கிறது.
24
தக்காளி, வெங்காயம் விலை உயர்வு
இந்த நிலையில் தான் தாக்காளி வெங்காயம் விலை தான் ஏழை எளிய மக்களின் மாத பட்ஜெட்டை குறைக்கவோ அதிகரிக்கவோ செய்கிறது. இதன் விலை உயர்ந்தால் மாத பட்ஜெட்டில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதே நேரம் விலை குறைந்தால் இல்லத்தரசிகளுக்கு கொண்டாட்டம் தான்.
அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெங்காயத்தின் வரத்து பல மடங்கு குறைந்ததால் விலையானது அதிகரித்தது. இதனால் ஒரு கிலோ 150 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து மக்கள் பாதிக்கப்பட்டுவதை கருத்தில் கொண்ட மத்திய அரசு மானிய விலையில் வெங்காயத்தை நாடு முழுவதும் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்தது.
34
வெங்காயத்தின் வரத்து அதிகரிப்பு
இதனையடுத்து ஒரு சில மாதங்களில் காரிப் பருவ வெங்காயத்தின் வரத்து அதிகரித்ததால் விலையானது சரசரவென குறைந்தது. ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது வெங்காயத்தின் வரத்து மேலும் அதிகரித்துள்ளதால் விலையானது சரிந்துள்ளது.
கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் சென்னையில் பல தெருக்களில் லாரிகளில் 5 கிலோ பெரிய வெங்காயம் 60 ரூபாய்க்கு கூவி கூவி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வெங்காய்த்தின் அளவு சற்று குறைவாக இருந்தாலும் இல்லத்தரசிகள் பை நிறைய வாங்கி செல்கிறார்கள்.
அதே நேரம் கடந்த மாதம் குறைந்திருந்த தக்காளி விலை சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ஒரு கிலோ தக்காளி 35 முதல் 40 ரூபாய்க்கு இன்று விற்பனையாகிறது. இதே போல பச்சை காய்கறிகளின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பீட்ரூட் ஒரு கிலோ ரூ 20 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும்,
கேரட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 75 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது