பக்தர்களே ரெடியா.! இலவசமாக அம்மன் கோயில் சுற்றுலா- வெளியான அசத்தலான அறிவிப்பு

Published : Jun 14, 2025, 08:15 AM IST

தமிழக அரசு அறநிலையத்துறை, ஆடி மாதத்தில் 2,000 பக்தர்களை புகழ்பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லவுள்ளது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

PREV
15
அறிநிலையத்துறை திட்டங்கள்

தமிழக அரசு அறநிலையத்துறைக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ராமேஸ்வரம்- காசி சுற்றுலா, அமர்நாத் யாத்திரை, புரட்டாசி மாத சுற்றுலா என பல சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது பக்தர்கள் மகிழ்விக்கும் வகையில் ஆடிமாத சுற்றுலா திட்டத்தை வெளியிட்டுள்ளது.

 இது தொடர்பாக தமிழக அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டிலுள்ள புகழ்பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு ஆடி மாதத்தில் 2,000 பக்தர்கள் கட்டணமின்றி ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர். ஆன்மிகப் பயணம் செல்ல விரும்பும் தகுதியுடைய பக்தர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

25
அம்மன் கோயிலுக்கு சுற்றுலா

தமிழ்நாட்டில் மக்கள் தாய்தெய்வ வழிபாட்டை தொன்று தொட்டுப் போற்றி வருகின்றனர். பல்வேறு திருக்கோயில்களுக்கு ஒரே நாளில் சென்று வழிபடுவதை பெரும் விருப்பமாகவும் கொண்டுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு கடந்தாண்டு ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு 1.003 பக்தர்களும், 

புரட்டாசி மாதத்தில் புகழ்பெற்ற வைணவத் திருக்கோயில்களுக்கு 1,008 பக்தர்களும் ஆன்மிகப் பயணமாக அழைத்து செல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, 2025- 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கையில் "ஆடி மாதத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு இவ்வாண்டு 2,000 பக்தர்கள் ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர்" என அறிவிக்கப்பட்டது.

35
ஆடி மாத ஆன்மிகப் பயணம்

அதனை செயல்படுத்திடும் வகையில் இந்தாண்டு சென்னை, தஞ்சாவூர், மதுரை. திருச்சி, கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களை தலைமையிடமாக கொண்டு ஆடி மாத ஆன்மிகப் பயணம் 5 பயணத் திட்டங்களாக 2025 ஜூலை மாதம் 18, 25, ஆகஸ்ட் மாதம் 01. 08 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தொடங்கப்பட உள்ளது. 

ஆன்மிகப் பயணம் செல்ல விரும்பும் பக்தர்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயதிற்கு மேல் 70 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். ஆண்டுவருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருப்பதோடு. அதற்கான வருமான சான்றிதழை வட்டாட்சியரிடமிருந்து பெற்று இணைக்க வேண்டும்.

45
ஆன்மிக பயணத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி.?

போதிய உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவ சான்றுடன், ஆதார் கார்டு அல்லது நிரந்தர கணக்கு எண் (Pan Card) நகல் இணைக்கப்பட வேண்டும். இந்த ஆன்மிகப் பயணத்திற்கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்றோ அல்லது www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் 11.07.2025-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

55
ஆன்மிக சுற்றுலாவிற்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்

ஆடி மாத ஆன்மிகப் பயணம் தொடர்பான விவரங்களுக்கு துறையின் இணையதளத்திலோ அல்லது 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம். ஆகவே, ஆன்மிகப் பயணம் செல்ல விரும்பும் பக்தர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories