திடீரென உயரும் வெங்காயம் விலை.! ஒரு கிலோ இவ்வளவா.? ஷாக்காகி நிற்கும் இல்லத்தரசிகள்

Published : Jun 14, 2025, 07:50 AM IST

இந்திய சமையலில் இன்றியமையாத வெங்காயத்தின் விலை, பருவமழை மற்றும் வானிலை மாற்றங்களால் ஏற்ற இறக்கமடைகிறது. 2024 காரீஃப் பருவத்தில் போதிய விளைச்சல் இருந்தும், தரம் மற்றும் மழையால் விலை உயர்ந்தது. தற்போது மீண்டும் பருவமழையால் விலை அதிகரித்துள்ளது.

PREV
16
வெங்காயமும் சமையலும்

வெங்காயம் இந்திய சமையலில் இன்றியமையாத பொருளாக உள்ளதால், அதன் தேவை எப்போதும் உயர்ந்தே இருக்கிறது. 2025-ஆம் ஆண்டில் வெங்காயத்தின் தேவை மற்றும் விலையில் பல்வேறு காரணிகளால் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. வெங்காயம் இந்தியாவில் அனைத்து வகையான உணவு தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்படுவதால், உள்நாட்டு தேவை மிக அதிகமாக உள்ளது. 

26
இந்தியாவில் வெங்காய உற்பத்தி

வெங்காய விளைச்சல் பருவமழை மற்றும் வானிலை மாற்றங்களைப் பொறுத்து அமைகிறது. 2024-இல் காரீஃப் பருவத்தில் 3.61 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் வெங்காயம் பயிரிடப்பட்டது, இது தேவையை பூர்த்தி செய்ய உதவியது. மழை மற்றும் தரமின்மை காரணமாக, குறிப்பாக திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் போன்ற பகுதிகளில் வெங்காய வரத்து குறைந்து, விலை உயர்ந்தது. இந்திய வெங்காயம் இலங்கை, மலேசியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் வெங்காயத்தின் விலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சத்தை தொட்டு இருந்தது. 

36
தக்காளி வெங்காயம் விலை என்ன.?

ஒரு கிலோ 100 முதல் 130 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து வெங்காயத்தின் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து விலையானது சரிய தொடங்கியது. ஒரு கிலோ 20 முதல் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் பருவமழை காரணமாக மீண்டும் வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை காய்கறிகளின் விலை உயர தொடங்கியுள்ளது. பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 முதல் 45 ரூபாய் வரை தரத்தை பொறுத்து விற்பனையாகிறது. 

46
ஏறி இறங்கும் தக்காளி வெங்காயம் விலை

தக்காளியும் சமையலில் முக்கிய தேவையாக உள்ளது. எனவே தக்காளி விலை உயர்ந்தால் இல்லத்தரசிகளின் நிலை திண்டாட்டம் தான். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக குறைந்திருந்த தக்காளி விலை மீண்டும் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஒரு கிலோ தக்காளி 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே போல பச்சை காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.

56
பச்சை காய்கறி விலை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 25 முதல் 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 15 முதல் 20 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும்,

 உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

66
இன்றைய காய்கறி விலை என்ன.?

காலிபிளவர் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், 

இஞ்சி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

Read more Photos on
click me!

Recommended Stories