சென்னை கோயம்பேடு மொத்த சந்தையில் காய்கறிகளின் விலை திடீரென குறைந்துள்ளது. குறிப்பாக, பெரிய வெங்காயம் கிலோ ரூ.7 முதல் ரூ.15 வரை விற்பனையாவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை இல்லாததே இந்த விலை சரிவுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
சென்னை கோயம்பேடு மொத்த சந்தையில் காய்கறி விலை திடீரென குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அதிக விலையில் விற்பனையாகியிருந்த காய்கறிகள் தற்போது மலிவு விலையில் கிடைப்பதால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக பெரிய வெங்காயம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. 1 கிலோ பெரிய வெங்காயம் தற்போது ரூ.7 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுவதால், 100 ரூபாயில் 15 கிலோ வெங்காயம் வாங்க முடியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பலரும் கூடை கூடையாக வெங்காயம் வாங்கிச் செல்கின்றனர்.
24
அள்ளிக்கிட்டு போங்க காய்கறிகளை.!
சின்ன வெங்காயம் 1 கிலோ ரூ.30, தக்காளி ரூ.17, பீட்ரூட் ரூ.20 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 1 கிலோ பச்சை மிளகாய் ரூ.15, உருளைக்கிழங்கு ரூ.21, குடைமிளகாய் ரூ.30 என விற்பனை செய்யப்படுகிறது. பாகற்காய் ரூ.30, சுரைக்காய் ரூ.25, அவரைக்காய் ரூ.70 என சந்தையில் விலை குறைந்த அளவில் நிலவுகிறது.
34
கேரட், காலிபிளவர் விலையும் குறைந்தது.!
ஊட்டியலிலிருந்து கொண்டு வரப்படும் கேரட் ரூ.50, காலிஃபிளவர் ரூ.20 என விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, வெங்காயம் மற்றும் தக்காளி விலையில் ரூ.10 முதல் ரூ.20 வரை குறைவு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மழை இல்லாத நிலைதான் இவ்வளவு பெரிய விலை சரிவிற்கு முக்கிய காரணமாக உள்ளது என்று கூறப்படுகிறது. விற்பனையாளர்கள் கூறுவதாவது, “மழை பெய்யாத வரைக்கும் காய்கறி விலை உயராது; சுமார் ஒரு மாதம் வரை விலை நிலைதான் இருக்கும்” என்கிறார்கள். இதனால் இல்லத்தரசிகள் சந்தோஷத்தில் உள்ளனர். பலர், நீண்ட நாட்களுக்கு பிறகு காய்கறிகள் மலிவு விலையில் கிடைத்துள்ளன என்றும் பை பைபையாக அள்ளிச்செல்ல முடிகிறது என்றும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.