Tamilnadu public exam
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கியது. இந்த தேர்வினை 7518 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள், 18, 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் 3316 தேர்வு மையங்களில் எழுதினர். இவர்களுக்கான தேர்வு பணிகளை கண்காணிக்க 4 470 பறக்கும் படைகளும் 43,446 தேர்வு கண்காணிப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டனர்.
12th public exam
அதேபோல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 5ம் தேதி தொடங்கி நாளை அதாவது 27ம் தேதி முடிவடைகிறது. இந்த தேர்வினை 7,557 பள்ளிகளில் படித்த 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 மாணவர்களும், 4 லட்சத்து 28 ஆயிரத்து 946 மாணவிகளும், 4755 தனித் தேர்வுகளும், 137 சிறைவாசிகள் என 8 லட்சத்து 23 ஆயிரத்து 261 பேர் 3316 தேர்வு மையங்களில் எழுதி உள்ளனர்.
11th public exam
10ம் தேதி வகுப்பு பொதுத் தேர்வினை பொறுத்தவரை மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வினை 12,480 பள்ளிகளில் பயின்ற 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும் 25,888 தனித்தேர்ர்களும், 272 சிறைவாசிகளும் என 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத உள்ளனர்.
Directorate of Government Examinations
12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அதற்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் வரும் ஏப்ரல் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தேர்வுகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. மேலும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பீட்டுப் பணிகள் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 30-ம் தேதி வரை நடக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், வருகிற மே மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.