Chain snatching Police encounter : சென்னையில் நேற்று காலை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் பள்ளிக்கரணை, வேளச்சேரி, திருவான்மியூர், அடையாறு, சைதாப்பேட்டை, கிண்டி என அடுத்தடுத்து இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவான்மியூர் இந்திரா நகர் பகுதியில் வேலைக்கு சென்று கொண்டிருந்த லட்சுமி என்ற பெண்ணின் கழுத்தில் இருந்து 5 சவரன் தங்க செயின் மர்ம நபர்களால் பறிக்கப்பட்டது.
அடுத்ததாக சாஸ்திரி பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த அம்புஜம் என்கிற மூதாட்டி, கிண்டி எம் ஆர் சி மைதானம் அருகே நடை பயிற்சி மேற்கொண்டிருந்த நிர்மலா என்கிற மூதாட்டி,
சென்னையில் தொடர் நகைபறிப்பு
சைதாப்பேட்டை கால்நடை மருத்துவமனை அருகே வேலைக்குச் சென்று கொண்டிருந்த இந்திரா என்ற பெண்ணிடம் ஒரு சவரன் நகை பறிப்பு என சென்னையில் ஒரே நேரத்தில் 8 இடங்களில் நகைபறிப்பு சம்பவங்கள் அரங்கேறியது. இதே போல கடந்த சில மாதங்களுக்கு முன்பும் தாம்பரம் பகுதியில் தொடர் செயின் பறிப்பு குற்றங்கள் நடைபெற்றது. எனவே குற்றவாளிகள் யார் என போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் இந்த தொடர் குற்றங்களில் ஈடுபட்டது ஒரே கும்பல் தான் என தெரியவந்தது.
விமானத்தில் தப்பி செல்ல திட்டம்
அதன் படி செயின் பறிப்பில் ஈடுபட்டது வடமாநில கும்பல் எனவும் நகை பறிப்பில் ஈடுபட்ட பின்னர் விமானத்தில் உடனடியாக தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்ல திட்டமிட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், கொள்ளயடிக்கப்பட்ட நகையோடு விமானம் மூலம் வெளிமாநிலங்களுக்கு தப்பி செல்ல அந்த வடமாநில இளைஞர்கள் முயன்றது போலீசாரின் கண்டறிந்தனர். இதனையடுத்து விமான நிலையத்தில் போர்டிங் முடிந்து விமானத்தில் ஏற தயாராக இருந்த 2 வடமாநில குற்றவாளிகளை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
chain snatching
இதனையடுத்து அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது குற்றவாளி ஜாபர் குலாம் ஹுசைன் இந்த குற்ற சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை தரமணி ரயில் நிலையம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த நகைகளை மீட்க ஜாபர் குலாம் ஹுசைனை போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது போலீசாரை தாக்கிவிட்டு அவர் தப்ப முயன்ற போது, காவல் ஆய்வாளர் முகமது புகாரி துப்பாக்கிசூடு நடத்தியுள்ளார். இதில் குண்டு காயம் அடைந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜாபர் பலியானார். இவர் மீது நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.