Dmk Alliance And Admk Alliance : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், கூட்டணி தொடர்பாக பல வித குழப்பங்கள் நிலவி வந்தது. அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம்பெற்றது.
இந்த கூட்டணியே வருகிற சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 8 வருடமாக வெற்றி கூட்டணியாக உள்ள திமுகவின் பலம் வாய்ந்த கூட்டணியை எதிர்க்க பெரிய அளவிலான கூட்டணி அமைக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
மீண்டும் பாஜக கூட்டணி
இதன் படி நடிகர் விஜய்யின் தவெகவை தங்கள் அணிக்கு இழுக்க திட்டம் தீட்டப்பட்டது. இதற்காக அதிமுக தரப்பில் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், விஜய்யின் நிபந்தனையால் கூட்டணி உடன்பாடு ஏற்படாமல் போனது. எனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்த அதிமுக, மீண்டும் பாஜகவோடு கூட்டணி இல்லையென உறுதியாக தெரிவித்தது.
இந்த நிலையில் விஜய் கை கொடுக்காத நிலையில் பாஜக கூட்டணியில் மீண்டும் இணைய அதிமுக திட்டமிட்டது. இதனையடுத்து தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடு மாறியது.
அமித்ஷாவுடன் சந்திப்பு
கூட்டணி தொடர்பாக கேள்விக்கு பதில் அளிக்கையில், திமுகவிற்கு எதிரான அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைப்போம் என தெரிவிக்கப்பட்டது. கொள்கை வேறு கூட்டணி வேறு என அறிவித்தது. எனவே அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை இணைத்து தேர்தலை எதிர்கொள்ள காய்நகர்த்தியது. இதன் முதல் கட்டம் தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை நேற்று சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது 2026ஆம் ஆண்டு அதிமுக- பாஜக கூட்டணி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
அதிருப்தியில் நிர்வாகிகள்
இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பாஜக மூத்த தலைவர் அமித்ஷா வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில் 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த பின், மது வெள்ளமும், ஊழல் பயுலும் முடிவுக்கு வந்துவிடும் என பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் பாஜக கூட்டணியால் தான் தோல்வியை தழுவியதாக மூத்த நிர்வாகிகள் ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பாஜகவுடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.