சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்ன? பக்தர்களுக்கு சூப்பர் அறிவிப்பு வெளியானது!

Published : Apr 28, 2026, 08:50 PM IST

திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்கான உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களிலிருந்து ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

PREV
16

புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இக்கோவில் நினைத்தாலே முக்தி தரக்கூடிய புண்ணிய தலமாக விளங்கக்கூடியது. அது மட்டுமல்லாமல் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் விளங்குகிறது. இங்குள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து செல்வது வழக்கம்.

26

இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பௌர்ணமி அன்றும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரின் அருளை பெறுவார்கள். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சித்ரா பௌர்ணமி வருகிற 30-ம் தேதி (வியாழக்கிழமை) இரவு 9.52 மணிக்கு தொடங்கி மறுநாள் மே 1-ம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11.08 மணிக்கு நிறைவடைகிறது. இந்நிலையில் கிரிவலம் வலம் வரும் பக்தர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

36

அதில், ஏப்ரல் 30 இரவு 09.50 மணி முதல் மே 01 இரவு 11.07 மணி வரை (வெள்ளிகிழமை) சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 30 முதல் திருவண்ணாமலைக்கும் மே 02ம் தேதி வரை பல்வேறு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

46

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து ஏப்ரல் 30 அன்று 548 பேருந்துகளும், மே 01 அன்று 565 பேருந்துகளும் மற்றும் 02 அன்று 35 பேருந்துகளும் சென்னை மாதவரத்திலிருந்து 30 அன்று 186 பேருந்துகளும் 01 அன்று 174 பேருந்துகளும் மற்றும் சென்னை அடையாரிலிருந்து 30 அன்று 55 பேருந்துகளும் 01 அன்று 50 பேருந்துகளும் தினசரி இயக்ககூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்தும் இயக்கப்படும்.

56

ஆக, சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 30/04/2026 முதல் 02/05/206 வரை 11,823 பேருந்துகள் தினசரி இயக்ககூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு மே 01 அன்று இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மதுரை, சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகக் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

66

மேலும், முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories