சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே திமுக கிளை செயலாளர் ராஜேந்திரன், நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். நிலத்தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், போலீசார் இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கருமந்துறை மலை கிராமங்களான கிராங்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் அப்பகுதியில் திமுக கிளை செயலாளராக இருந்து வருகிறார். முன்னாள் வனக்குழு தலைவராகவும் இருந்துள்ளார். இவருக்கு சரிதா(40) என்ற மனைவியும் கோகிலா, பரிமளா என்ற இரு மகள்களும், நவீன் என்ற மகனும் உள்ளனர்.
23
துப்பாக்கியால் சுட்டு கொலை
இந்நிலையில் தனது விவசாய நிலத்திற்கு சென்ற போது மர்ம நபர்கள் சிலர் அவரை நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மலை கிராமம் என்பதால் உயிரிழந்த இந்த சம்பவம் காலதாமதமாக போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
33
தனிப்படை அமைத்து போலீஸ் விசாரணை
இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தேகத்தின் பேரில் ராஜமாணிக்கம், அவரது அண்ணன் பழனிசாமி ஆகிய இருவரை சந்தேகத்தின் பேரில் இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இருவருக்கும் நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. மேலும் இதில் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பதை அறிய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. திமுக பிரமுகர் நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.