நிக்காம ரத்தமா போகுது.. என்னை காப்பாத்துங்கப்பா! வெங்காரம் சாப்பிட்ட கல்லூரி மாணவியின் கடைசி நிமிடக் கதறல்! நடந்தது என்ன?

Published : Jan 20, 2026, 09:56 AM IST

College Student: மதுரை கல்லூரி மாணவி ஒருவர், உடல் எடையைக் குறைக்க யூடியூப் வீடியோவில் பார்த்தபடி வெங்காரத்தை உட்கொண்டுள்ளார். இதனால் ஏற்பட்ட வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

PREV
15
உடல் பருமன்

மதுரை மாநகர் செல்லூர் மீனாம்பாள்புரம் காமராஜர் குறுக்குத்தெரு பகுதியை சேர்ந்த வேல்முருகன் (51). இவரது மகள் கலையரசி(19). பிரபல தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். கலையரசி உடல் பருமனாக இருந்துள்ளார். இதனை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் குறைக்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் கல்லூரி மாணவி கலையரசி இணைவோம் இயற்கையுடன் என்ற YOUTUBE பக்கத்தில் உடல் எடை குறையாதவர்களுக்கு வெங்காரம் சாப்பிட்டால் குறையும் என தெரிவித்திருந்தார். இதனை நம்பி கல்லூரி மாணவி கடந்த 16ம் தேதியன்று நாட்டு மருந்து கடையில் வெங்காரம் வாங்கி வந்து மறுநாள் சனிக்கிழமை அன்று சாப்பிட்டுள்ளார்.

25
வெங்காரம் சாப்பிட்ட கல்லூரி மாணவி

சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. பின்னர் பெற்றோர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்குச் அழைத்து சென்று சிகிச்சையளித்துள்ளனர். பின்னர் மாலையில் வீடு திரும்பிய நிலையில் கலையரசிக்கு மீண்டும் வாந்தி வயிற்றுபோக்கு ஏற்பட்டதால் வீட்டின் அருகிலுள்ள மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

35
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை

வீட்டிற்கு வந்த கலையரசி தனக்கு அதிகமாக வயிறு வலிப்பதாகவும் வயிற்றுபோக்கில் ரத்தம் வெளியேறி வருவதாகவும் கூறி தனது தந்தையிடம் கதறி அழுதுள்ளார். ஆனாலும் மீண்டும் கலையரசிக்கு இரவு 11 மணியளவில் ரத்தத்துடன் வயிற்றுபோக்கு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு கலையரசியை அழைத்து சென்றனர்.

45
போலீஸ் விசாரணை

அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கலையரசி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கலையரசி உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

55
வெங்காரம் என்றால் என்ன?

வெங்காரம் (Borax/ Borate) என்பது சோடியம் டெட்ராபோரேட் (Sodium Tetraborate) வெள்ளை நிறத்தில், கற்கண்டு போன்ற வடிவத்தில் இருக்கும் ஒரு கனிம உப்பு. இது துவர்ப்பு சுவையுடையது, சோடியம் போரேட் என வேதியியல் ரீதியாக அழைக்கப்படுகிறது. இது தங்கம் உருக்கவும், சில குறிப்பிட்ட மருத்துவ முறைகளில் சுத்திகரிக்கப்பட்ட பின்பே மிகக் குறைந்த அளவில் பயன்படுத்தப்படுவதாகும். ஆனால், அதனைப் பற்றிய புரிதல் இன்றி வாங்கிச் சாப்பிட்டதே மாணவியின் உயிரிழப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories