தேசிய நெடுஞ்சாலையில் அதிர்ச்சி.. பயங்கர சத்தத்துடன் வெடித்த பேருந்து.. அலறிய 55 பயணிகள் நிலை என்ன?

Published : Jan 19, 2026, 04:37 PM IST

Government Bus Accident: மதுரையில் இருந்து பழனிக்கு சென்ற அரசு பேருந்தின் டயர் சமயநல்லூர் அருகே வெடித்ததால், பேருந்தின் ஆக்சல் துண்டாகி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

PREV
13
அரசு பேருந்து

மதுரை மாவட்டம் ஆரம்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து பழனிக்கு அரசு பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொண்டனர். அப்போது மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே கட்டபுளி நகர் பகுதியில் பேருந்து சென்ற போது பின் பக்க டயர் மோசமாக இருந்தது. இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த போதே திடீரென பின் பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

23
டயர் வெடித்து விபத்து

இதனால் பேருந்து நிலைதடுமாறும் ஓட்டுநர் பிரேக் அடிக்கவே பின்பக்க ஆக்சல் துண்டாகி தனியாக போது சென்றது மட்டுமல்லாமல் இடதுபுறமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பயணிகள் அலறி கூச்சலிட்டனர். இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும் 5க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

33
பயணிகளின் நிலை என்ன?

பின்னர் ஆம்பிலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விபத்தின் காரணமாக அப்பகுதியில் ஒரு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து கிரேன் மூலம் பேருந்தை அகற்றி வழி ஏற்படுத்தினர்.

Read more Photos on
click me!

Recommended Stories