அதிகாலையிலேயே தலைநகர் சென்னையை சுத்துப்போட்ட அமலாக்கத்துறை! யார் யார் வீடுகளில் ரெய்டு!

Published : Nov 19, 2025, 10:43 AM IST

சென்னையில் சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இரும்பு மற்றும் தங்க நகை வியாபாரிகளின் வீடுகள் சோதனை நடைபெறுகிறது.

PREV
13
அமலாக்கத்துறை சோதனை

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட இடங்களில் வரி ஏய்வு உள்ளிட்ட பல்வேறு புகாரின் அடிப்படையில் அவ்வப்போது அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னையில் சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், கே.கே.நகர், எம்ஜிஆர் நகர் மற்றும் புறநகர் பகுதி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

23
சென்னையில் அமலாக்கத்துறை சோதனை

அதாவது சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள சைதன்யா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் இரும்பு வியாபாரி நிர்மல் குமார் வீடு மற்றும் அலுவலகம், சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள கலைச்செல்வன் என்பவரது வீட்டிலும், அம்பத்தூர் திருவேங்கடா நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிரகாஷ் வீடு, கே.கே. நகர் லட்சுமணசாமி சாலையில் உள்ள தங்க நகை வியாபாரி சேட் என்பவர் வீடு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

33
சட்டவிரோத பணப்பரிமாற்றம்

21 வாகனங்களில் 10க்கும் மேற்பட்ட குழுக்களாக சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் சோதனையின் முடிவில் முழு விவரம் தெரியவரும். அதிகாலையில் சென்னையில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருவது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories