சென்னையில் நள்ளிரவு 1.30 மணி! மீன் விற்கும் பெண்ணுடன் மெரினா பீச்சில்.. ஆட்டோ ஓட்டுநருக்கு நடந்த அதிர்ச்சி

Published : Nov 08, 2025, 10:55 AM IST

Chennai Crime News: சென்னை மெரினா கடற்கரையில் நள்ளிரவில் அந்தோணி என்பவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கள்ளக்காதலியை சந்திக்க சென்றபோது ஒரு கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

PREV
14

சென்னை மெரினா நொச்சிக்குப்பம் லூப் சாலை அருகே உள்ள கடற்கரையில் நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் பொதுமக்கள் கடற்கரையில் தூங்க சென்றுள்ளனர். அப்போது மணல் பரப்பில் ஒருவர் தலையின் பின்புறத்தில் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் உயிருக்கு போராடிய நபரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்தார்.

24

இதனையடுத்து உயிரிழந்தவர் யார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரி நகரை சேர்ந்த அந்தோணி(40) என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் அந்தோணிக்கு பட்டினப்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இருவரும் நெருக்கமாக இருந்ததை பார்த்த பெண்ணின் உறவினர்கள் அவரை எச்சரித்து அனுப்பினர்.

34

இந்நிலையில் அந்தோணி நேற்று இரவு உறவினர் வீட்டுக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு கள்ளக்காதலியை சந்திக்க அந்தோணி மெரினாவுக்கு சென்றுள்ளார். இருவரும் கடற்கரையில் நேற்று நள்ளிரவு அமர்ந்து ஒன்றாக பேசி கொண்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல் அந்தோணியை சுற்றி வளைத்து கத்தியால் சரமாரியாக தலையில் வெட்டுவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

44

இதனையடுத்து போலீசார் ஆட்டோ ஓட்டுநர் அந்தோணியை கொலை செய்த நபர்களை அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும், அவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் கல்லூரி மாணவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories