சென்னையில் அதிர்ச்சி! சாலையில் தாறுமாறாக பைக் ரேஸ்! சினிமா பாணியில் தூக்கி வீசப்பட்டு இரண்டு பேர் உயிரி**ழப்பு!

Published : Nov 06, 2025, 11:49 AM IST

சென்னையில் ரீல்ஸுக்காக நடந்த பைக் ரேஸில் கல்லூரி மாணவர் மற்றும் அப்பாவி வாகன ஓட்டி என இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராயப்பேட்டை மேம்பாலத்தில் நடந்த இந்த கோர விபத்தில், ஹெல்மெட் அணிந்து மெதுவாகச் சென்ற அப்பாவி ஒருவரும் பலியானார்.

PREV
15

ரீல்ஸ் மோத்தால் பைக் சாகசம் செய்யும் இளைஞர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். அந்த வகையில் பல லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த பைக்குகளோடு இளைஞர்கள் சாலையில் ரேஸ் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதுதொடர்பாக போக்குவரத்து காவல்துறை பல்வேறு கடுமையான நடவடிக்கை எடுத்தாலும் இந்த சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளது. 

25

அதுவும் குறிப்பாக வார இறுதி நாட்களில அதிகளவில் நடைபெறுகிறது. இந்நிலையில் சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞரும், சக வாகன ஓட்டி உள்ளிட்ட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

35

சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் மேம்பாலத்தில் கல்லூரி மாணவர் சுகைல்(19) மற்றும் செல்போன் கடை ஊழியர் ஜோயல் ஆகியோர் பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ராயப்பேட்டையிலிருந்து அண்ணா சாலை நோக்கி மேம்பாலத்தில் இருவரும் விலை உயர்ந்த பைக்கில் அதிவேகத்தில் சீறிப் பாய்ந்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மீறி சென்று ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டது. இதில் இரண்டு வாகனங்களும் பல மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது.

45

அப்போது மேம்பாலத்தின் எதிர் திசையில் தலைகவசம் அணிந்து சென்ற சக வாகன ஓட்டி ஒருவர் மீது பைக் ரேஸில் ஈடுபட்ட வாகனம் ஒன்று மோதியதில் அந்த நபர் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில், பைக் ரேஸில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் சுகைல் மற்றும் எதிர்திசையில் வந்த ராயப்பேட்டையை சேர்ந்த குமரன்(49) ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

55

பைக் ரேஸில் ஈடுபட்ட மற்றொரு இளைஞரான ஜோயல் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தை நேரில் பார்த்த மக்கள் இதுபோன்ற பைக் ரேஸ்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவேசமாக கூறினர். உயிரிழந்த குமரனுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. ஹெல்மெட் அணிந்து மெதுவாக வந்தும் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories