சென்னையில் பட்டப்பகலில் க.காதலியுடன் காரில்! கணவனுக்கு போட்டு கொடுத்த தோழி! இறுதியில் நடந்த பயங்கரம்!

Published : Oct 30, 2025, 11:49 AM IST

சென்னை அசோக் நகரில் அரசு ஒப்பந்ததாரர் பிரகாஷ் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டார். கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்ததை போலீசார் விசாரணையில் கண்டறிந்தனர். இது தொடர்பாக பிரகாஷின் காதலி, அவரது கணவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

PREV
14
பட்டப்பகலில் இளைஞர் கொலை

புதுச்சேரியை சேர்ந்த பிரகாஷ். இவர் அரசு ஒப்பந்த பணிகளை டெண்டர் எடுத்து செய்து வந்துள்ளார். இந்நிலையில் சென்னை அசோக் நகர் 4வது பிரதான சாலையில் நேற்று மதியம் சொகுசு காரில் தனது பெண் தோழியுடன் நெருக்கமாக இருந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பிரகாஷை காரில் இருந்து வெளியில் இழுத்து போட்டு பட்டப்பகலில் பெண் தோழியின் கண்முன்னே சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பித்தனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.

24
கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை

இதுதொடர்பாக அசோக் நகர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில், கைதானவர்கள் வந்தவாசி மாவட்டத்தை சேர்ந்த கடலூர் போக்குவரத்து துறையில் பணியாற்றும் தனஞ்செழியன் (42), அவரது மனைவி சுகன்யா (37) மற்றும் இவரது தோழி குணசுந்தரி (27) என்பதும் கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடைபெற்றது தெரியவந்துள்ளது.

34
திருமணத்துக்கு பிறகும் தொடர்பு

இதுகுறித்து போலீசார் கூறுகையில்: பிரகாஷூம், சுகன்யாவும் பள்ளி நண்பர்கள். இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால், சுகன்யாவின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தனஞ்செழியனுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். பின்னர் இருவரும் சென்னை ஜாபர்கான் பேட்டையில் வசித்து வந்தனர். திருமணத்துக்கு பிறகு சுகன்யா, பிரகாஷூடன் தொடர்பில் இருந்துள்ளார். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவர் தனஞ்செழியனுக்கு தெரியவந்ததை அடுத்து மனைவி கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதை அடுத்து கோபித்துக் கொண்டு புதுச்சேரியில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனால் பிரகாஷூம், சுகன்யாவும் வசதியாக போனதால் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர்.

44
காரில் இருந்து இழுத்து போட்டு கொலை

இந்நிலையில், பிரகாஷ் டெண்டர் விஷயமாக கள்ளக்காதலி சுகன்யாவுடன் சென்னைக்கு வந்துள்ளார். பின்னர், அசோக்நகர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். இந்த தகவலை சுகன்யாவின் தோழி குணசுந்தரி தனஞ்செழியனுக்கு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தனஞ்செழியன், தனது நண்பர்கள் 3 பேர் மற்றும் குணசுந்தரியுடன் அசோக்நகருக்கு வந்து பிரகாஷை கொலை செய்தனர். பின்னர், மனைவி சுகன்யாவையாவை தனஞ்செழியன் அழைத்து சென்று உள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories