போட்டி போடும் தக்காளி, வெங்காயம்.. பை பையாக அள்ளி செல்லும் இல்லத்தரசிகள்.! ஒரு கிலோ இவ்வளவு தானா.?

Published : Jan 24, 2026, 07:48 AM IST

சென்னை கோயம்பேடு மொத்த சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளின் விலை குறைந்ததால் வியாபாரிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

PREV
15
சமையலுக்கு முக்கியம் தக்காளி, வெங்காயம்

சமையலுக்கு முக்கிய தேவையாக இருப்பது காய்கறிகள், அதிலும் தக்காளி மற்றும் வெங்காயம் இல்லாமல் சமைப்பது என்பது இயலாத காரியம். குறிப்பாக ரசம் முதல் பிரியாணி வரை எதுவாக இருந்தாலும் தக்காளி, வெங்காயம் கட்டாயம் தேவை. இந்நிலையில் வரத்தை பொறுத்து காய்கறிகள் விலை தினமும் நிர்ணயிக்கப்படுகின்றன.

25
சென்னை கோயம்பேடு சந்தை

இந்நிலையில் சென்னை கோயம்பேடு மொத்த சந்தையில் காய்கறி விலைகள் தற்போது கணிசமான அளவில் குறைந்துள்ளதால், வியாபாரிகளும் பொதுமக்களும் இரட்டிப்பு மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கின்றனர்.

35
வெங்காயம் விலை

பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 26 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 23 முதல் 25 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 18 முதல் 20 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

45
குடை மிளகாய்

அதேபோல் வாழைப்பூ 18 ரூபாய்க்கும், குடை மிளகாய் ஒரு கிலோ 56 முதல் 62 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 46 ரூபாய்க்கும், சுரைக்காய் 1 கிலோ 35 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 முதல் 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

55
காலிபிளவர்

முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 முதல் 66 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், கத்திரிக்காய் 1 கிலோ 46 ரூபாய்க்கும், 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 முதல் 66 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories