சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அவ்வப்போது மசாஜ் மற்றும் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை பெருநகர காவல் எல்லையில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்யும் நபர்கள் மற்றும் புரோக்கர்களை காவல் ஆணையர் அருண் உத்தரவுப்படி விபச்சார தடுப்பு பிரிவு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.