பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 15, 16, மற்றும் 17, 2026 ஆகிய தேதிகளில் சென்னை மெட்ரோ ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் ரயில்களின் இயக்க இடைவெளி நேரத்திற்கு ஏற்ப மாறுபடும்.
தலைநகர் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. எந்த போக்குவரத்து நெரிசலிலும் சிக்காமல் குறிப்பட்ட நேரத்தில் ஒரு இடத்தை சென்றடைய முடிகிறது. குறிப்பாக மழை காலங்களில் மெட்ரோ ரயிலில் கூட்டம் அலைமோதும். மெட்ரோ ரயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் சேவையில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
24
மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்
இதுதொடர்பாக மெட்ரோ ரயிர் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, ஜனவரி 15, 16 மற்றும் 17, 2026 ஆகிய தேதிகளில் மெட்ரோ ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும். சென்னை மெட்ரோ தனது ரயில் சேவைகளை வழக்கமாக காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்குகிறது.
34
பொங்கல் பண்டிகை
காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் மெட்ரோ ரயில்கள் 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில்கள் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். மேலும், இரவு 10 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
பயணிகள் அனைவரும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மற்றும் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது தகவல்களைத் தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் உதவிக்கு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உதவி மையத்தை 1860-425-1515 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.chennaimetrorail.org என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். அனைத்துப் பயணிகளும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.