இத்திட்டத்தின்படி பிரதான சுற்று குழாய் (Ring Main), நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நான்காவது நிலையத்தையும் சேர்த்து, ஒன்பது குடிநீராதாரங்களை ஒரு வளையமாக இணைக்கிறது. பிரதான சுற்று குழாய் திட்டம் உந்து நிலையங்கள், செலுத்தும் குழாய்கள் (feeder main), மற்றும் விநியோக குழாய்களை (Transmission Main) உள்ளடக்கியதாகும்.
இத்திட்டத்தில், செலுத்தும் குழாய்கள் (feeder main) மூலமாக ஒன்பது உந்து நிலையங்களிலிருந்து குடிநீர் பெறுவதற்கு, பெருநகர சென்னையச் சுற்றி, 98 கிலோமீட்டர் நீளத்திற்கு தேனிரும்பு (MS) குழாய் கொண்ட பிரதான சுற்றுக்குழாய் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
சமமான குடிநீர் வழங்குவதை உறுதிசெய்யும்
பிரதான சுற்றுக்குழாயில் இருந்து பெருநகர சென்னை மாநகரின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள 84 குடிநீர் விநியோக நிலையங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படும். பிரதான சுற்று குழாய் திட்டம், 2057ம் ஆண்டுக்கான இறுதி தேவையை நிறைவு செய்ய, நாளொன்றுக்கு 1762 மில்லியன் லிட்டர் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரதான சுற்று குழாய் திட்டம், ஒரு நீராதாரத்தில் பற்றாக்குறை ஏற்பட்டாலும் அனைத்து நீரேற்று நிலையங்களிலிருந்தும் சமமான குடிநீர் வழங்குவதை உறுதிசெய்யும்.