மக்களே ரெடியா இருங்க! சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் 5 மணி நேரம் மின்தடை!

Published : Jan 09, 2026, 07:41 AM IST

தமிழ்நாடு மின்சார வாரியம் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னையில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளது. இந்த மின்தடையால் வளசரவாக்கம் மற்றும் போரூர் பகுதிகள் பாதிக்கப்படும்.

PREV
14
தமிழ்நாடு மின்சார வாரியம்

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். மின்தடை செய்யப்படும் நேரத்தில் மின் கம்பிகளை மாற்றுதல், சிறு சிறு பழுதுகளை சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

24
சென்னையில் இன்று மின்தடை

இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி சென்னையில் இன்று முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

34
வளசரவாக்கம்

விருகம்பாக்கம், ஆழ்வார்திரு நகர், சுரேஷ் நகர், கைக்கன் குப்பம், விஓசி தெரு, பாரதி காலனி, ஆற்காடு சாலை, கிழக்கு காமகோடி நகர், திருவள்ளுவர் தெரு, எஸ்.வி.எஸ்.நகர், சவுத்ரி நகர், இந்திரா நகர், மசூதி தெரு, பெரியார் நகர், மீனாட்சியம்மன் நகர், லட்சுமி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

44
போரூர்

நண்பர்கள் நகர், ராஜேஸ்வரி நகர், வைத்தி நகர், பாரி கார்டன், ராயல் சிட்டி, மலயம்பாக்கம், எஸ்பி அவென்யூ, தேவதாஸ் நகர், சுமித்ரா நகர், பிள்ளையார் கோவில் தெரு, ரஹமத் நகர், சக்தி நகர், எல்கேபி நகர், வசந்தபுரி, ருக்மணி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories