சென்னை மின்சார ரயில் மீது பாட்டில் வீச்சு! அலறிய பயணிகள்.. ரத்த வெள்ளத்தில் 3 பேர்!

Published : Jan 05, 2026, 01:37 PM IST

Chennai Electric Train: அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரயில் மீது வியாசர்பாடி அருகே மர்ம நபர்கள் பாட்டில் வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் மூன்று பயணிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

PREV
13

தமிழகத்தை பொறுத்த வரையில் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மின்சார ரயில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமல்லாமல் எந்தவொரு டிராபிக் இல்லாமலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் அலுவலகங்களுக்கு சென்றடைய முடியும். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வியாபாரிகள் என லட்சகக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். சென்னை புறநகர் பகுதியை இணைப்பதில் மின்சார ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது.

23

இந்நிலையில் பாட்டில் வீசிய சம்பவத்தில் பயணிகள் காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி மின்சார ரயில் வந்துக்கொண்டிருந்தது. இந்த ரயில் வியாசர்பாடி அருகே வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மின்சார ரயில் மீது பாட்டிலை வீசியுள்ளனர். இதில் 3 பயணிகளுக்கு தலை மற்றும் கை கால்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்ட அலறி துடித்தனர். இதனையடுத்து காயமடைந்த பயணிகள் ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

33

இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories