அமெரிக்க அதிபரை விட 2 மடங்கு அதிகம் சம்பாதித்த குகேஷ்; அடேங்கப்பா! இத்தனை கோடியா?

First Published | Jan 12, 2025, 12:56 PM IST

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷ் அமெரிக்க அதிபரை விட 2 மடங்கு அதிகம் சம்பாதித்துள்ளார். 

World Chess Champion Gukesh

உலக செஸ் சாம்பியன் குகேஷ் 

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ், சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி பட்டம் வென்று சாதனை படைத்தார். உலக அரங்கில் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த 18 வயதான குகேஷுக்கு விளையாட்டின் உயர்ந்த விருதான 'கேல் ரத்னா' விருது வழங்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இந்நிலையில், குகேஷ் கடந்த 2024ம் ஆண்டில் மட்டும் அமெரிக்க அதிபரை விட 2 மடங்கு அதிகம் சம்பாதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷிக்கு பரிசுத் தொகையாக 15,77,842 அமெரிக்க டாலர்கள் கொடுக்கப்பட்டது. இது இந்திய மதிப்பில் 13.6 கோடி ரூபாய் ஆகும். 

Gukesh's Income In 2024

தமிழ்நாடு அரசின் பரிசுத்தொகை 

இது தவிர குகேஷிக்கு தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவித்தது. இது மட்டுமின்றி குகேஷ் படித்த வேலம்மாள் பள்ளியில் அவருக்கு விலை உயர்ந்த பென்ஸ் காரை பரிசாக வழங்கியிருந்தது. உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றதற்காக குகேஷ் பெற்ற 15,77,842 டாலர்கள், அமெரிக்க அதிபரின் ஆண்டு வருமானத்தை விட அதிகமாகும். அமெரிக்க அதிபர் ஆண்டுக்கு 4,00,000 அமெரிக்க டாலர்களை வருமானமாக பெறுகிறார். 

ஒருவழியாக இந்திய அணியில் இடம்பிடித்த ஷமி; பாண்ட்யாவுக்கு 'ஷாக்'; டி20 வீரர்கள் லிஸ்ட் இதோ!

Tap to resize

US President Income

அமெரிக்க அதிபரின் வருமானம் 

இது தவிர செலவுகளுக்காக 50,000 டாலர்கள், பயணக் கணக்கிற்கு 1,00,000 டாலர்கள் மற்றும் பொழுதுபோக்கு விஷயங்களுக்காக 19,000 டாலர்கள் என மொத்தம் 5,01900 டாலர்கள் ஆண்டு வருமானம் பெறுகிறார். இது 2024ம் ஆண்டு குகேஷ் பெற்ற பரிசுத்தொகை வருமானத்தை (15,77,842 டாலர்கள்) விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

இத்தனைக்கும் தமிழ்நாடு அரசு அறிவித்த ரூ.5 கோடி உள்ளிட்ட மற்ற பரிசுத்தொகைகள் இதில் சேர்க்கப்படவில்லை. அதையும் சேர்த்தால் அமெரிக்க அதிபரை விட குகேஷின் 2024ம் ஆண்டு வருமானம் மூன்று மடங்கு அதிகமாகி விடும்.

Praggnanandhaa Income

பிரக்ஞானந்தா எவ்வளவு?

2024-ம் ஆண்டில் குகேஷ் 8 பெரிய தொடர்களில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. குகேஷிடம் தோல்வி அடைந்த சீனாவின் டிங் லிரென் 11,83,600 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.9.90 கோடியை) பரிசாக பெற்றுள்ளார். தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா 2,02,136 அமெரிக்க டாலர்களும் (ரூ. ரூ.1.74 கோடி),  நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் 6,33,369 அமெரிக்க டாலர்களும் (ரூ.5.45 கோடி) பரிசுத்தொகை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா-இங்கிலாந்து டி20, ஓடிஐ தொடர்; போட்டிகள் தொடங்கும் நேரம்? எதில் பார்க்கலாம்? முழு அட்டவணை!

Latest Videos

click me!